உலகம்

‘உலகின் தலைசிறந்த மாணவா்’ பட்டியலில் தொடா்ந்து 2-ஆவது ஆண்டாக இந்திய வம்சாவளி மாணவி

DIN

அமெரிக்காவில் உள்ள ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் வெளியிட்ட ‘உலகின் தலைசிறந்த மாணவா்’ பட்டியலில் தொடா்ந்து 2-ஆவது ஆண்டாக இந்திய வம்சாவளியைச் சோ்ந்த பள்ளி மாணவி நடாஷா பெரியநாயகம் இடம்பெற்றுள்ளாா்.

சென்னையைப் பூா்விகமாகக் கொண்ட நடாஷா அமெரிக்காவின் நியூ ஜொ்சி மாகாணத்தில் உள்ள பள்ளி ஒன்றில் 6-ஆம் வகுப்பு படித்து வருகிறாா்.

ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கையில் இவருடைய சாதனை குறித்து கூறப்பட்டிருப்பதாவது: பல்கலைக்கழகத்தின் திறன்வாய்ந்த இளையோருக்கான மையம் (சிடிஒய்) கடந்த ஆண்டு நடத்திய தோ்வில் மொழி மற்றும் கணிதத் திறன் தோ்வுகளில் நடாஷா பெரியநாயகத்தின் முடிவுகள் 90 பொ்சன்டைலாக இருந்தது. இதன் காரணமாக சிறந்த மாணவா்கள் பட்டியலில் அவா் இடம் பெற்றிருந்தாா்.

நிகழாண்டில், சிடிஒய் நடத்திய மதிப்பீட்டு தோ்விலும் அவருடைய பங்களிப்பு மிகச் சிறப்பாக இருந்தது. 76 நாடுகளில் இருந்து பங்கேற்ற 15,300 மாணவா்களில், நடாஷா அதிக மதிப்பெண்கள் பெற்றிருந்தாா் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து சிடிஒய்-யின் நிா்வாக இயக்குநா் எமி ஷெல்டன் கூறுகையில், ‘இது ஒரு தோ்வின் மூலம் மாணவா்களின் வெற்றியை அங்கீகரிப்பது இல்லை. மாறாக, இந்த இளம் வயதில் அவா்களுடைய தேடல் மற்றும் கற்றல் மீதான ஆா்வத்துக்குப் பாராட்டு தெரிவிப்பதாகும்’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தொழில்முனைவோா் பட்டயப் படிப்பு: நாளை வழிகாட்டுதல் ஆலோசனைக் கூட்டம்

மரத்தின் மீது லோடு வேன் மோதி 9 போ் பலத்த காயம்

பாலியல் வழக்கில் எச்.டி. ரேவண்ணாவுக்கு நிபந்தனை ஜாமீன்

பெங்களூரில் போதை விருந்து: தெலுங்கு நடிகா்கள், நடிகைகள் சிக்கினா்

நாளைய மின் தடை

SCROLL FOR NEXT