உலகம்

கடல் மட்ட உயர்வால் சென்னை, கொல்கத்தா நகரங்களுக்கு ஆபத்தா?

DIN

வாஷிங்டன்: காலநிலை மாறுபாடு காரணமாக, கடல் மட்ட உயர்வு, சில ஆசிய பெருநகரங்கள் மற்றும் மேற்கு வெப்பமண்டல பசிபிக் தீவுகள் மற்றும் மேற்கு இந்தியப் பெருங்கடலை அதிக அளவில் பாதிக்கும் என்றும் சென்னை, கொல்கத்தா குறிப்பிடத்தக்க அபாயங்களை சந்திக்கக்கூடும் புதிய ஆராய்ச்சி தெரிவித்துள்ளது. 

தொடர்ந்து அதிக அளவு பசுமை இல்ல வாயுக்களை வெளியிடும் பட்சத்தில் 2100ஆம் ஆண்டில் குறிப்பாக குறிப்பிடத்தக்க அபாயங்களை எதிர்கொள்ளக்கூடிய பல ஆசிய பெருநகரங்களை ஆராய்ச்சிக் குழு அடையாளம் கண்டுள்ளது. அவற்றில் சென்னை, கொல்கத்தா, யாங்கூன், பாங்காக், ஹோ சி மின் மற்றும் மணிலா போன்ற நகரங்கள் குறிப்பிடத்தக்க அபாயங்களை சந்திக்கக்கூடும்.

பருவநிலை மாற்றம் காரணமாக கடல் மட்டத்தில் ஏற்படும் இயற்கையான ஏற்ற இறக்கங்களின் விளைவுகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆய்வு நேச்சர் க்ளைமேட் சேஞ்ச் என்ற இதழில் வெளியிடப்பட்டது.

காலநிலை மாற்றத்தால் ஏற்படும் கடல் மட்ட உயர்வை விட உள்நாட்டு காலநிலை மாறுபாடு சில இடங்களில் கடல் மட்ட உயர்வை 20-30 சதவீதம் வரை அதிகரிக்கக்கூடும். இது தீவிர வெள்ள நிகழ்வுகளை அதிவேகமாக அதிகரிக்கும் என்று அந்த ஆய்வில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.

எடுத்துக்காட்டாக, மணிலாவில் காலநிலை மாற்றத்தை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு, 2006 ஆம் ஆண்டை விட 2100 ஆம் ஆண்டில் கடலோர வெள்ள நிகழ்வுகள் 18 மடங்கு அதிகமாக நிகழும். ஆனால், மிக மோசமான சூழ்நிலையில், காலநிலை மாற்றம் மற்றும் உள் காலநிலை மாறுபாடு ஆகியவற்றின் சுழற்சியின் அடிப்படையில் அவை 96 மடங்கு அடிக்கடி ஏற்படக்கூடும் என்று தெரிவித்துள்ளது.

காலநிலை மாற்றத்தால் மட்டும் தீவிர வெள்ள நிகழ்வுகளை விட, உள் காலநிலை மாறுபாடு காரணமாக சில இடங்களில் கடல் மட்ட உயர்வு 20-30 சதவீதம் அதிகரிக்கக்கூடும் என்று ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘கொற்றவை’ ஸ்ரேயா ரெட்டி!

அப்பாவிகளின் உயிரிழப்பைத் தடுப்பதில் அரசுக்கு அக்கறை இல்லையா? - அன்புமணி

'விரக்தியில் பிரதமர் மோடி' - முதல்வர் ஸ்டாலின் கருத்து!

மோடியின் பிளவுவாதக் கனவுகள் ஒருபோதும் பலிக்காது! - முதல்வர் ஸ்டாலின்

ஸ்வாதி மாலிவால் பாஜகவால் மிரட்டப்பட்டார்: அதிஷி குற்றச்சாட்டு!

SCROLL FOR NEXT