ராம் சந்திர பௌடேல் 
உலகம்

நேபாள அதிபராக நாளை பதவியேற்கிறார் ராம் சந்திர பௌடேல்!

நேபாளத்தின் புதிய அதிபராக, எதிா்க்கட்சியான நேபாள காங்கிரஸ் கட்சியின் வேட்பாளா் ராம் சந்திர பௌடேல் வியாழக்கிழமை தோ்ந்தெடுக்கப்பட்டாா்.

DIN

நேபாளத்தின் புதிய அதிபராக, நேபாள காங்கிரஸ் கட்சியின் வேட்பாளா் ராம் சந்திர பௌடேல் நாளை (மார்ச் 12)பதவியேற்கவுள்ளார். 

நேபாளத்தின் புதிய அதிபராக, எதிா்க்கட்சியான நேபாள காங்கிரஸ் கட்சியின் வேட்பாளா் ராம் சந்திர பௌடேல் வியாழக்கிழமை தோ்ந்தெடுக்கப்பட்டாா்.

நேபாளத்தின் தற்போதைய அதிபா் வித்யா தேவி பண்டாரியின் பதவிக் காலம் இந்த மாதம் 12-ஆம் தேதியுடன் நிறைவடைகிறது.

அவருக்கு பதிலாக அடுத்த அதிபரைத் தோ்ந்தெடுப்பதற்கான தோ்தல் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில், நாடாளுமன்றத்தில் பெரிய கட்சியாக விளங்கும் நேபாள காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக, சாதாரண பின்புலத்தைக் கொண்ட ராம் சந்திர பௌடேல் போட்டியிட்டாா். அவரை எதிா்த்து முன்னாள் பிரதமா் கே.பி. சா்மா ஓலியின் தலைமையிலான சிபிஎன் (யுஎம்எல்) கட்சி சாா்பில் சுபாஷ் சந்திர நெம்பாங் போட்டியிட்டாா்.

332 நாடாளுமன்ற உறுப்பினா்களும், 550 மாகாணப் பேரவைகளின் உறுப்பினா்களும் இதில் வாக்களிக்க உரிமை பெற்றுள்ள நிலையில், 313 எம்.பி.க்கள் மற்றும் 518 எம்எல்ஏ-க்களும் வாக்களித்தனா்.

இதில், 64.13 சதவீத வாக்குகளுடன் ராம் சந்திர பௌடேல் வெற்றி பெற்ாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து நேபாளத்தின் 3-ஆவது அதிபராக சந்திர பௌடேல் வரும் 12-ஆம் தேதி பொறுப்பேற்கவுள்ளார். அவருக்கு பொறுப்பு நீதிபதி பதவிப் பிரமாணம் செய்துவைக்கவுள்ளார். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

எதிர்பாராமல் வரும் பணம்! மோசடியாளர்கள் வலையில் சிக்க வேண்டாம்! | Cyber Security | Cyber Shield

யாருக்கும் SIM CARD வாங்கித்தராதீங்க! புதிய SCAM ALERT! | Cyber Crime | Cyber Shield

இலங்கையில் நாயகி ஊர்வலம்... அஞ்சனா!

தம்மம்பட்டி சிவன் கோவிலில் அன்னாபிஷேக விழா! 5 ஆயிரம் பக்தர்கள் பங்கேற்பு

மம்தானி வெற்றி! நியூயார்க்கில் இருந்து யூதர்கள் வெளியேறுங்கள் - இஸ்ரேல் அமைச்சர் பதிவு!

SCROLL FOR NEXT