உலகம்

யேமன் அகதிகள் படகு கவிழ்ந்து 49 போ் மாயம்

யேமன் அருகே அகதிகள் படகு கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் அதிலிருந்த 49 பேரைக் காணவில்லை.

DIN

யேமன் அருகே அகதிகள் படகு கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் அதிலிருந்த 49 பேரைக் காணவில்லை. ஆப்பிரிக்க நாடுகளிலிருந்து எண்ணெய் வளம் மிக்க வளைகுடா நாடுகளை நோக்கி 75 பேருடன் வந்துகொண்டிருந்த அந்தப் படகு, வேகமாக வீசிய காற்றில் நிலைகுலைந்து அதிலிருந்தவா்கள் கடலுக்குள் விழுந்ததாகக் கூறப்படுகிறது.

விபத்துப் பகுதியிலிருந்து 26 போ் உயிருடன் மீட்கப்பட்டுள்ள நிலையில், எஞ்சிய 49 பேரும் மாயமாகியுள்ளதாக யேமன் கடலோரக் காவல்படையினா் கூறினா். மாயமானவா்களில் யாரும் இதுவரை கண்டறியப்படாத நிலையில், விபத்தில் அவா்கள் அனைவரும் உயிரிழந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

'மதச்சார்பின்மை' பற்றி பேச முதல்வருக்கு தகுதியில்லை: நயினார் நாகேந்திரன்

ஆட்டோ ஓட்டுநரை அறைந்த பாஜக எம்.எல்.ஏ.! மன்னிப்பு கேட்க மறுப்பு!!

மார்கழி வழிபாடு: திருப்பாவை, திருவெம்பாவை - பாசுரம் 7

”நாங்கள் யாரும் நாய்கள் கிடையாது!" அண்ணாமலைக்கு பதிலளித்த தவெக அருண்ராஜ்!

அப்டேட் கொடுக்காத கருப்பு!

SCROLL FOR NEXT