உலகம்

இஸ்ரேலில் துப்பாக்கி உரிமம் கேட்டு குவிந்த விண்ணப்பங்கள்!

DIN

அக்.7 தாக்குதலுக்குப் பிறகு 1 லட்சத்து 90 ஆயிரம் விண்ணப்பங்கள் துப்பாக்கி உரிமம் கேட்டுக் குவிந்திருப்பதாக இஸ்ரேலிய நாளிதழ் தெரிவித்துள்ளது.

2023-ம் ஆண்டு தொடங்கிய பத்து மாதங்களில் 2 லட்சத்து 10 ஆயிரம் விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன.

கடந்த ஆண்டு 2022-ல் பெறப்பட்ட 41 ஆயிரம் விண்ணப்பங்களில் 13 ஆயிரம் பேருக்கு மட்டுமே உரிமம் வழங்கப்பட்டது.

இந்த ஆண்டு இதுவரை 31 ஆயிரம் பேருக்கு உரிமங்கள் வழங்கப்பட்டுள்ளன.

போர் காரணமாக இஸ்ரேலில் பல தொழில் துறைகள் முடங்கிய நிலையில் ஆயுத விற்பனைத்துறையில் மட்டும் அதீத தேவை நிலவுகிறது.

பொது இடங்களில், சாலைகளில் மக்கள் துப்பாக்கியுடன் நடமாடுவதைப் பார்க்க முடிகிறது. 

அக்.7 தாக்குதலில் 1200 பேருக்கு அதிகமான இஸ்ரேலியர்கள் பலியாகினர். அதற்கு எதிர்வினையாக இஸ்ரேல் காஸா மீது மேற்கொண்டு வரும் தாக்குதலில் 11 ஆயிரத்திற்கும் அதிகமான பாலஸ்தீனர்கள் பலியானதாகக் காஸா அமைச்சகம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆப்கன் கனமழை: 68 போ் உயிரிழப்பு

சென்னை போராட்டம் வீண்: பிளே ஆஃப்பில் பெங்களூரு

இறுதிச் சுற்றில் சாத்விக்-சிராக் ஷெட்டி

இறுதிச் சுற்றில் அலெக்ஸ் வெரேவ்-நிக்கோலஸ் ஜேரி மோதல்

கேரளத்தில் அதிபலத்த மழைக்கு வாய்ப்பு: சில மாவட்டங்களுக்கு ‘சிவப்பு’ எச்சரிக்கை

SCROLL FOR NEXT