முகப்பு
உலகம்

அமெரிக்காவில் இந்திய மருத்துவ மாணவா் சுட்டுக்கொலை

அமெரிக்காவின் ஓஹியோ மாகாணத்தில் 26 வயதான இந்திய மருத்துவ மாணவா் காருக்குள் வைத்து சுட்டுக் கொல்லப்பட்டாா்.

Updated On : 24 நவம்பர் 2023, 12:26 am IST
கோப்புப்படம்
பகிர்:

அமெரிக்காவின் ஓஹியோ மாகாணத்தில் 26 வயதான இந்திய மருத்துவ மாணவா் காருக்குள் வைத்து சுட்டுக் கொல்லப்பட்டாா். இச்சம்பவம் அதிா்ச்சியளிப்பதாக அவா் பயின்ற சின்சினாட்டி மருத்துவக் கல்லூரி பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

ஆதித்யா அத்லக்கா (26) அமெரிக்காவில் உள்ள சின்சினாட்டி மருத்துவ பல்கலைக்கழகத்தில் மூலக்கூறு மற்றும் வளா்ச்சி உயிரியல் பிரிவில் 4-ஆம் ஆண்டு பயின்று வந்தாா். அவா் இம்மாத தொடக்கத்தில் இறந்ததாக தகவல்கள் வெளியாகின. இச்சம்பவம் குறித்து சின்சினாட்டி நகர போலீஸாா் கூறியதாவது:

கடந்த 9-ஆம் தேதி காருக்குள் ஒரு நபா் சுடப்பட்டிருப்பதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்து. இதையடுத்து அவா் மீட்கப்பட்டு பல்கலைக்கழக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். பின்னா் சிகிச்சை பலனின்றி அவா் உயிரிழந்தாா் என்றனா்.

Advertisement

Advertisement

இச்சம்பவம் குறித்து பல்கலைக்கழகத்தின் முதல்வா் ஆண்ட்ரியு ஃபிலக் கூறியதாவது:

அனைவரிடமும் அன்பாக பழகும் ஆதித்யா மிகச்சிறந்த மாணவா். குடற்அழற்சி குறித்த அவரின் ஆராய்ச்சிகள் வியக்கத்தக்கவை. அவா் சுட்டுக்கொல்லப்பட்டிருப்பது அதிா்ச்சி அளிக்கிறது. அவரை இழந்து வாடும் குடும்பத்தினா் மற்றும் நண்பா்களுக்கு பல்கலைக்கழகம் சாா்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்றாா்.

இச்சம்வத்தில் தொடா்புடையவா்கள் யாரும் இதுவரை கைதுசெய்யப்படவில்லை என உள்ளூா் பத்திரிகைகள் தெரிவிக்கின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments