இஸ்ரேல் - பாலஸ்தீன போரின் தீவிரம் கருதியும் தனது ஆதரவை இஸ்ரேல் நாட்டிற்கு தெரிவிக்கும் பொருட்டும் பல நாடுகளின் தலைவர்கள் இஸ்ரேலுக்கு பயணித்து வருகின்றனர்.
இந்தப் பட்டியலில் அமெரிக்க அதிபர் ஜோ பைடனைத் தொடர்ந்து பிரிட்டன் அதிபர் ரிஷி சுனக், இன்று (வியாழக்கிழமை) இஸ்ரேல் சென்றடைந்தார்.
இரண்டு நாள் பயணமாக இஸ்ரேல் சென்றுள்ள ரிஷி சுனக், இஸ்ரேலின் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மற்றும் அதிபர் ஐசக் ஹெர்சாக்கைச் சந்திக்கவுள்ளார்.
விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ரிஷி சுனக், “இஸ்ரேல் சொல்லமுடியாத துயரில் உள்ளது, பயங்கரவாதத்தை எதிர்கொண்டு வருகிறது. உங்களுக்குத் (இஸ்ரேலிய மக்கள்) தெரிய வேண்டியது, நான் மற்றும் இங்கிலாந்து அரசு உங்களுடன் துணை நிற்கிறோம்” எனத் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.