ஆர்ஜென்டீனாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!
ஆர்ஜென்டீனாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவில் 6.3 ஆகப் பதிவாகியுள்ளதா புவியியல் ஆய்வுமையம் தெரிவித்துள்ளது.
அர்ஜென்டினாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவில் 6.3 ஆகப் பதிவாகியுள்ளதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக வெளியிட்ட அறிக்கையில்,
ஆர்ஜென்டீனாவில் இன்று காலை 8.35 மணிக்கு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 6.3 ஆகப் பதிவான இந்த நிலநடுக்கத்தால் அங்குள்ள கட்டிடங்கள் குலுங்கின. இதனால் மக்கள் பீதியடைந்தனர்.
Advertisement
Advertisement
அண்டை நாடான சிலியிலும் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் குறித்து இதுவரை எந்த தகவலும் வெளியாகவில்லை.
நிலநடுக்கம் 171 கி.மீட்டர் ஆழத்தில் ஏற்பட்டதாக நேற்று அமெரிக்காவின் அலாஸ்கா தீவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டு சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டு இருந்தது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.