இஸ்ரேலின் தாக்குதலால் காஸாவில் இடம்பெயர்ந்து தற்காலிக முகாம்களில் வசித்துவரும் மக்களுக்கு கப்பல் வழியாக உணவு கொண்டுசேர்க்கும் உலக மத்திய சமையலறை அறக்கட்டளை என்கிற அமைப்பு தனது சேவைகளை நிறுத்துவதாக அறிவித்துள்ளது.
முன்னதாக இந்த அறக்கட்டளையின் பணியாளர்கள் ஆறு பேர் மற்றும் பாலஸ்தீன ஓட்டுநர் இஸ்ரேல் வான்வழி தாக்குதலில் பலியாகினர்,
இவர்களில் மூவர் ஐரோப்பாவைச் சேர்ந்தவர்கள், ஆஸ்திரேலியா, போலாந்து மற்றும் அமெரிக்க-கனடிய குடியுரிமை பெற்றவர் உள்பட ஆறு பேர் பலியாகினர். மத்திய காஸாவில் உள்ள அல்-அஹ்சா நினைவு மருத்துவமனையில் அவர்களின் உடல்கள் இருக்கும் காணொலி வெளியானது. அதில் மத்திய சமையலறையின் லட்ச்சினை பதித்த டி-சர்ட் அணிந்திருந்த பணியாளர்கள் உயிரிழந்த நிலையில் காணப்பட்டனர்.
இது குறித்து, “இது சோகமானது. மனிதநேய பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் ஒருபோதும் பலியாகக் கூடாது. எப்போதும்” என அந்த அமைபின் செய்தித் தொடர்பாளர் லிண்டா ரோத் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
ஆஸ்திரேலியா பிரதமர், மனிதநேய பணியாளர்கள் இறந்தது குறித்து விளக்கமளிக்குமாறு இஸ்ரேலிடம் கேட்டுள்ளதாக தெரிவித்தார்.
இரண்டாவது தவணையாக இந்த அமைப்பின் வழியாக கப்பலில் உணவுப்பொருள்கள் ஏறத்தாழ 400 டன் அளவுக்கு திங்கள்கிழமை காஸாவுக்கு கொண்டுவரப்பட்டது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.