கோப்புப் படம் 
உலகம்

1000 வீடுகளின் பூட்டுகளை உடைத்து பிடிபட்டவர் சொன்ன விசித்திர காரணம்!

ஜப்பானில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் பூட்டுகளை உடைத்து நுழைந்த நபர் பிடிபட்டதும் சொன்ன விசித்திர காரணம்...

DIN

ஜப்பானில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் பூட்டுகளை உடைத்து நுழைந்த நபர் காவல்துறையினரிடம் பிடிபட்டதும் விசித்திரமான காரணத்தைச் சொல்லியுள்ளார்.

தெற்கு ஜப்பானில் தசாய்ஃபூ பகுதியில் கடந்த நவ. 25 அன்று வீடு ஒன்றின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்த நபரை, அந்த வீட்டின் உரிமையாளர் காவல்துறையினரிடம் பிடித்துக் கொடுத்தார்.

37 வயதான அந்த நபரை காவல்துறையினர் அவரைக் கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடத்திய போது வீட்டிற்குள் நுழைந்ததற்கு ஒரு விசித்திரமான காரணத்தை அந்த நபர் சொல்லியுள்ளார்.

விசாரணையில் அந்த நபர் கூறியதாவது, ”நான் இதுவரை 1,000-க்கும் மேற்பட்ட வீடுகளின் பூட்டுகளை உடைத்து உள்ளே நுழைந்துள்ளேன். மற்றவர்களின் வீடுகளுக்குள் அப்படி நுழைவது என்னுடைய பொழுதுபோக்கு.

அப்படி நுழையும்போது யாராவது என்னைப் பார்த்து விடுவார்களோ என்று பயமாக இருக்கும். என்னுடைய உள்ளங்கைகள் அப்போது அதிகமாக வேர்க்கும். இது எனக்கு திகிலான அனுபவமாகவும் என்னுடைய மன அழுத்ததைப் போக்குவதாகவும் இருக்கும்” என்று கூறியுள்ளார்.

வீடுகளுக்குள் நுழைந்து இதுவரை அவர் திருடிய பொருள்கள் குறித்து காவல்துறையினர் விசாரித்தபோது, அவர் இதுவரை எந்தப் பொருளையும் திருடியதில்லை என்று தெரிவித்துள்ளார்.

காவல்துறையினரும் அவர் இவ்வாறு நுழைந்த வீடுகளில் இருந்து பொருள்கள் திருடு போனதாக எந்தப் புகாரும் வரவில்லை என்று கூறியுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மிளா குறுக்கே பாய்ந்ததில் வணிகா் காயம்

கோவில்பட்டியில் சோளத்தட்டை கிடங்கில் தீ விபத்து

போதைப் பொருள் தடுப்பு விழிப்புணா்வு ஊா்வலம்

கல்குவாரி நீரில் மூழ்கி பொறியியல் மாணவா் உயிரிழப்பு

தொழிலாளி வீட்டில் தீ விபத்து: பொருள்கள் எரிந்து சேதம்

SCROLL FOR NEXT