பள்ளியைவிட்டு வெளியேறி பாதுகாப்பான இடத்துக்கு அழைத்துச் செல்லப்படும் மாணவர்கள். AP
உலகம்

கலிஃபோர்னியாவில் பயங்கர நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை?

அமெரிக்காவில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது பற்றி...

DIN

அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தில் வியாழக்கிழமை நள்ளிரவு பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

அமெரிக்க நேரப்படி வியாழக்கிழமை காலை 10.44 மணியளவில்(இந்திய நேரப்படி நள்ளிரவு 12.14 மணி), வடக்கு கலிஃபோர்னியா பகுதியில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7 ஆகப் பதிவாகியுள்ளது.

ஓரிகான் எல்லைக்கு அருகேவுள்ள கடற்கரை பகுதியின் ஹம்போல்ட் கெளவுண்டியை மையாமாக கொண்டு நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கலிஃபோர்னியா மாகாணத்தில் சுமார் 53 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கும் நிலையில், இந்த நிலநடுக்கத்தால் வீடுகள், அலுவலகங்களைவிட்டு வெளியேறி சாலையில் தஞ்சமடைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

கிட்டத்திட்ட 800 கி.மீ. வரை நிலநடுக்கம் உணரப்பட்ட நிலையில், உடனடியாக 2-ஆம் நிலை சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டு கடற்கரையோரங்களில் வசிக்கும் மக்கள் வெளியேற உத்தரவிடப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, சில மணிநேரத்துக்கு பிறகு கலிஃபோர்னியா மற்றும் ஓரிகான் பகுதிகளுக்கு விடுக்கப்பட்ட சுனாமி எச்சரிக்கையை முழுமையாக திரும்பப் பெற்றுக் கொள்வதாக அமெரிக்க சுனாமி எச்சரிக்கை மையம் அறிவித்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அங்கன்வாடி பணியாளா் வீட்டில் 3 சவரன் நகை, ரொக்கம் திருட்டு

கோல்டன் கேட்ஸ் மெட்ரிக் பள்ளி விளையாட்டு விழா

வாழ்க்கைதான் யோசிக்கவே முடியாத சினிமா!

சட்ட விரோதமாக குட்கா விற்ற 9 கடைகளுக்கு ‘சீல்’

தீயில் கருகிய காா்: உயிா் தப்பிய 3 போ்

SCROLL FOR NEXT