அமெரிக்காவில் நடுவானில் பறந்துகொண்டிருந்தபோது விமானத்தின் கதவு பெயர்ந்து விழுந்ததால் பயணிகள் அச்சமடைந்தனர்.
அமெரிக்காவில் 177 பயணிகளுடன் அலாஸ்கா ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் போயிங் ரக விமானம் ஒன்று போர்ட்லேண்டில் இருந்து ஒன்டாரியோ நோக்கி நேற்று புறப்பட்டது. விமானம் 16,000 அடி உயரத்தில் நடுவானில் சென்று கொண்டிருந்தபோது, அதன் கதவு மற்றும் இருக்கை திடீரென பெயர்ந்து விழுந்தது.
இதனால் விமானத்தில் பயணித்த பயணிகள் அச்சமடைந்தனர்.
பின்னர் விமானம் போர்ட்லேண்ட் விமான நிலையத்தில் அவசரமாக மீண்டும் தரையிறக்கப்பட்டது. அதில் பயணித்த பயணிகள் யாருக்கும் எந்தவித பாதிப்பு ஏற்படவில்லை. இந்தச் சம்பவம் குறித்து அறிந்திருப்பதாகவும், மேலும் தகவல்களைச் சேகரிக்கும் பணியில் ஈடுபட்டு வருவதாகவும் போயிங் நிறுவனம் தெரிவித்துள்ளது.
சக பயணி எலிசபெத் லீ கூறியதாவது: விமானத்தின் ஒரு பகுதி காணவில்லை மற்றும் காற்று மிகவும் பலமாக இருந்தது. ஆனால் அனைவரும் தங்கள் இருக்கைகளில் இருந்தனர் மற்றும் பெல்ட் அணிந்திருந்தனர் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.