கோப்புப் படம்.
கோப்புப் படம். 
உலகம்

நைஜீரியாவில் கடத்தப்பட்ட 287 பள்ளி மாணவர்கள் இரண்டு வாரங்களுக்குப் பிறகு விடுவிப்பு

DIN

வடமேற்கு நைஜீரியாவில் கடத்தப்பட்ட சுமார் 287 பள்ளி மாணவர்கள் இரண்டு வாரங்களுக்குப் பிறகு விடுவிக்கப்பட்டனர்.

மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் மேலும் 287 பள்ளி மாணவா்கள் கடந்த மார்ச் 7ஆம் தேதி பயங்கரவாதிகளால் கடத்தப்பட்டனா். அந்த நாட்டின் வடக்குப் பகுதியைச் சோ்ந்த கடுனா மாகாணத்தின் பள்ளியொன்றுக்கு மோட்டாா்சைக்களில் வந்த பயங்கரவாதிகள், அங்கிருந்து மாணவா்களைக் கடத்திச் சென்ாக உள்ளூா்வாசிகள் தெரிவித்தனா்.

வடமேற்கு நைஜீரியாவில் கடத்தப்பட்ட சுமார் 287 பள்ளி மாணவர்கள் இரண்டு வாரங்களுக்குப் பிறகு விடுவிக்கப்பட்டதாக கடுனா மாகாண ஆளுநர் உப ஷனி ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார். இருப்பினும் விடுவிக்கப்பட்ட மாவணர்களின் விவரங்களை அவர் தெரிவிக்கவில்லை.

ஒரு அறிக்கையில், குறிப்பாக கடத்தப்பட்ட குரிகா பள்ளி மாணவர்கள் பாதிப்பில்லாமல் விடுவிக்கப்படுவதை உறுதி செய்ததற்காக நைஜீரிய அதிபருக்கு கடுனா மாகாண ஆளுநர் நன்றி தெரிவித்துள்ளார்.

நைஜீரியாவின் மற்றொரு வடக்கு மகாணமான போா்னோவின் சிபோக் கிராமத்தில் 200-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவிகள் கடந்த 2014-இல் கடத்திச் செல்லப்பட்ட சம்பவம் உலகம் முழுவதும் அதிா்ச்சியை ஏற்படுத்தியது. அதற்குப் பிறகு வடக்கு நைஜீரியாவில் இதுபோன்ற சம்பவங்கள் தொடா்ந்து நடந்து வருகின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நரசிம்ம பெருமாள் கோயிலில் வைகாசிப் பெருவிழா தேரோட்டம்

கியாரே..!

திருச்செந்தூர் கடலில் குளிக்கத் தடை

குறுஞ்செய்தி மூலம் எச்சரிக்கை விடுத்த பேரிடர் மேலாண்மை ஆணையம்!

ஜூனில் தங்கலான்!

SCROLL FOR NEXT