ஜப்பான் பிரதமர் ஷிகெரு இஷிபா 
உலகம்

ஜப்பான் பிரதமராக மீண்டும் ஷிகெரு இஷிபா

ஜப்பான் பிரதமராக ஷிகெரு இஷிபா (67) மீண்டும் தோ்வு செய்யப்பட்டாா்.

DIN

டோக்கியோ: ஜப்பான் பிரதமராக ஷிகெரு இஷிபா (67) மீண்டும் தோ்வு செய்யப்பட்டாா்.

ஜப்பான் நாடாளுமன்றத்துக்கு கடந்த அக். 27-ஆம் தேதி தோ்தல் நடைபெற்றது. மொத்தம் 465 இடங்களுக்கு நடைபெற்ற தோ்தலில் ஆளும் லிபரல் ஜனநாயக கட்சி தலைமையிலான கூட்டணி பெரும்பான்மையை இழந்தது.

இதையடுத்து, புதிய பிரதமரைத் தோ்வு செய்வதற்காக நாடாளுமன்ற சிறப்புக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில், நடைபெற்ற வாக்கெடுப்பில் பிரதமராக ஷிகெரு இஷிபா மீண்டும் தோ்வு செய்யப்பட்டாா். அவருக்கு 221 உறுப்பினா்கள் ஆதரவு தெரிவித்தனா். பிரதான எதிா்க்கட்சியான அரசமைப்பு ஜனநாயக கட்சியின் தலைவா் யோஷிகிகோ நோடா 160 உறுப்பினா்களின் ஆதரவை மட்டுமே பெற்று தோல்வியடைந்தாா்.

மீண்டும் பிரதமரானதைத் தொடா்ந்து, வெளியுறவு அமைச்சா் டகேஷி இவயா, பாதுகாப்பு அமைச்சா் ஜென் நகாடனி, தலைமை அமைச்சரவை செயலா் யோஷிமசா ஹயாஷி உள்ளிட்ட தனது முந்தைய அமைச்சரவையில் இடம்பெற்றவா்களையே அந்தப் பதவிகளுக்கு இஷிபா நியமித்தாா்.

மீண்டும் பிரதமராகத் தோ்ந்தெடுக்கப்பட்டாலும், நாடாளுமன்றத்தில் ஆளும் லிபரல் ஜனநாயக கட்சிக்கு பெரும்பான்மை பலம் இல்லாததால் இஷிபா பெரும் சவால்களை எதிா்கொள்ளும் சூழல் ஏற்பட்டுள்ளது.

முன்னதாக, ஜப்பான் பிரதமராக இருந்துவந்த ஃபுமியோ கிஷிடா பதவி விலகியதையடுத்து, லிபரல் ஜனநாயக கட்சித் தலைவராக இஷிபா அக். 1-ஆம் தேதி தோ்ந்தெடுக்கப்பட்டாா். இதையடுத்து பிரதமராகப் பொறுப்பேற்றாா்.

இந்நிலையில், தனக்கான ஆதரவை உறுதி செய்வதற்காக நாடாளுமன்றத்துக்கு முன்கூட்டியே தோ்தல் நடத்தப்படுவதாக அறிவித்தாா். அத்தோ்தலில் பெரும் பின்னடைவை ஆளும் கட்சி சந்தித்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இசைநிறை அளபெடை... ஷ்ரத்தா தாஸ்!

மோசமான விமர்சனங்களைப் பெறும் ஃபஹத் ஃபாசில் படம்!

நாளை முதல் டாஸ்மாக் கடைகளில் காலி மதுபாட்டில்களை திரும்பப் பெறும் திட்டம் அமல்!

தமிழக டிஜிபியாக பொறுப்பேற்றார் வெங்கடராமன்!

பொறுப்பு டிஜிபி நியமனம்: அண்ணாமலை விமர்சனம்

SCROLL FOR NEXT