முகப்பு
உலகம்

பெருவின் முன்னாள் அதிபருக்கு 20 ஆண்டு சிறை!

பெருவின் முன்னாள் அதிபருக்கு 20 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

Updated On : 22 அக்டோபர் 2024, 8:18 am IST
அலெஜான்ட்ரோ டோலிடோ
பகிர்:

பெருவின் முன்னாள் அதிபர் அலெஜான்ட்ரோ டோலிடோவுக்கு 20 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

பெருவின் முன்னாள் அதிபர் அலெஜான்ட்ரோ டோலிடோ பிரேசிலில் உள்ள கட்டுமான நிறுவனத்துடன் ஊழலில் ஈடுபட்டதாக 20 ஆண்டுகள் மற்றும் 6 மாதங்கள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

அவர் கட்டுமான நிறுவனத்தில் பல லட்சம் டாலர்கள் லஞ்சம் பெற்றுள்ளது விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

மால்டோவா பொதுவாக்கெடுப்பு: ஐரோப்பிய யூனியனில் இணைய பெரும்பான்மை ஆதரவு

தென் அமெரிக்க நாடான பெருவில் நெடுஞ்சாலை அமைக்க அனுமதித்ததற்கு ஓடேபெக்ட் என்னும் கட்டுமான நிறுவனத்தில் இருந்து 35 மில்லியன் டாலர் லஞ்சம் பெற்றதாக டோலிடோ மீது அதிகாரிகள் குற்றம் சாட்டியுள்ளார்.

அலெஜான்ட்ரோ டோலிடோ 2001 முதல் 2006 வரை பெருவின் அதிபராக பதவி வகித்துள்ளார்.

பாகிஸ்தான் தலைமை நீதிபதிகளின் பதவிக் காலத்துக்கு வரம்பு

இந்த வழக்கை அமெரிக்கா விசாரணை நடத்தியது. அதன்படி, மெக்சிகோ, குவாதமாலா, ஈகுவடார் ஆகிய நாடுகளிலும் அமெரிக்கா தனது விசாரணையைத் தொடங்கியது. மேலும், இந்த விசாரணையில் டோலிடோ உள்பட பெருவின் முன்னாள் அதிபர்கள் 4 பேர் மீது அதிகாரிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.

ஆனாலும், இந்த ஊழல் வழக்கை அலெஜான்ட்ரோ டோலிடோ மறுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ஹிஸ்புல்லா தொடா்புடைய வங்கிகள் மீது இஸ்ரேல் தாக்குதல்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments