பாகிஸ்தானில் 2 திருநங்கைகள் ஆணவக் கொலை!
திருநங்கைகளை கொலை செய்த மூவரையும் காவல்துறையினர் கைது செய்தனர்
பாகிஸ்தானில் திருநங்கைகளை ஆணவக் கொலை செய்த மூவரை காவல்துறையினர் கைது செய்தனர்.
பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் உள்ள மர்தான் நகரில், ஞாயிற்றுக்கிழமையில் (அக். 20) இரண்டு திருநங்கைகளை மூன்று பேர் சேர்ந்து கொலை செய்துள்ளனர். இதனைத் தொடர்ந்து, அவர்கள் மூவரையும் கைது செய்யுமாறு திங்கள்கிழமையில் (அக். 21) காவல்துறையினரை திருநங்கைகள் சமூக அமைப்பினர் வலியுறுத்தியுள்ளனர்.
இதனையடுத்து, அவர்கள் மூவரையும் சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்த காவல்துறையினர், அவர்களிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் திருநங்கைகளைக் கொலை செய்ததாக மூவருமே ஒப்புக் கொண்டனர்.
Advertisement
Advertisement
பாகிஸ்தானில் திருநங்கைகள் மீதான ஆணவக் கொலைகள் நாளுக்குநாள் அதிகரித்து வருவதாகவும் அப்பகுதியினர் தெரிவித்தனர்; திருநங்கைகள் பெரும்பாலும் துன்புறுத்தல், துஷ்பிரயோகம் மற்றும் தாக்குதல்களுக்கு ஆளாவதாகவும் கூறினர்.
இதையும் படிக்க: கனடாவில் இந்திய சீக்கிய பெண் மர்ம மரணம்!
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.