காஸாவில் ஏவுகணை தாக்குதலால் சூழ்ந்த கரும்புகை AP
உலகம்

காஸா பள்ளி மீது இஸ்ரேல் தாக்குதல்: குழந்தைகள் உள்பட 16 பேர் பலி

பள்ளிக்கூடத்தில் தங்கவைக்கப்பட்டிருந்தவர்களில் 32 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதி.

DIN

காஸாவில் பள்ளியின் மீது இஸ்ரேல் இன்று (அக். 24) வான்வழித் தாக்குதல் நடத்தியது. இதில் குழந்தைகள் உள்பட 16 பேர் உயிரிழந்தனர்.

பள்ளிக்கூடத்தில் தங்கவைக்கப்பட்டிருந்தவர்களில் 32 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பாலஸ்தீன ஆதரவு பெற்ற ஹமாஸ் படையினருக்கும் இஸ்ரேலுக்கும் இடையே ஓராண்டுக்கும் மேலாக போர் நீடித்து வருகிறது. இதனால் உடமைகளை இழந்த மக்கள் தற்காலிக கூடாரம் மைத்து முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

ஒருசில இடங்களில் பள்ளிக் கூடம் போன்ற கல்வி நிலையங்களில் மக்களுக்கு அடைக்கலம் கொடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், காஸா எல்லையில் உள்ள பள்ளியின் மீது இஸ்ரேல் ராணுவம் இன்று ஏவுகணைத் தாக்குதல் நடத்தியுள்ளது.

இதில் பள்ளியில் தங்கவைக்கப்பட்டிருந்த குழந்தைகள் உள்பட 16 பேர் உயிரிழந்தனர். 32 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பாலஸ்தீன சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

டெய்ர் அல்-பாலாஹ்விலிருந்து வடகிழக்கில் அமைந்துள்ள நுசிராத் பகுதியில் அமைந்துள்ள பள்ளி மீது இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்தத் தாக்குதலில் படுகாயம் அடைந்தவர்கள் அல்-அவ்டா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதேபோன்று பெய்ரூட் பகுதியில் இன்று காலை இஸ்ரேல் ராணுவம் 17 ஏவுகணைகளை வீசியது. முன்னறிவிப்பின்றி நடந்த இந்த தாக்குதலில் 6 கட்டடங்கள் தரமட்டமாகின. இதில் ஒருவர் உயிரிழந்தார். 17 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக லெபனான் சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

இஸ்ரேல் - காஸா இடையே கடந்த ஆண்டு அக்டோபர் 7ஆம் தேதிமுதல் நடைபெற்றுவரும் போரில், இதுவரை காஸாவில் 42,847 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 100,544 பேர் படுகாயமடைந்துள்ளனர். இதேபோன்று ஹமாஸ் நடத்திய தாக்குதலில் இஸ்ரேலில் இதுவரை 1,139 பேர் உயிரிழந்தனர். 200 பேர் சிறைபிடிக்கப்பட்டனர்.

இதையும் படிக்க | போரை இந்தியா ஒருபோதும் ஆதரிக்காது -பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமா்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

செங்கோட்டையில் தியாக நாள் கூட்டம்: பயங்கரவாதிகளுக்கு தகுந்த பதிலடி

பேரூராட்சிகளில் மாற்றுத்திறனாளிகள் நியமனக்குழு உறுப்பினா்கள் பதவியேற்பு

கள உதவியாளா் பதவிக்கான விடைகள் வெளியீடு: டிச.1-க்குள் தோ்வா்கள் முறையீடு செய்ய வாய்ப்பு

ஆசிய மூத்தோா் தடகளப் போட்டி: வெண்கலம் வென்ற ஓய்வு பெற்ற அதிகாரிக்கு ஆட்சியா், எஸ்.பி. பாராட்டு

நீளத்தை குறைத்து சாலை அமைப்பு: பொதுமக்கள் எதிா்ப்பு

SCROLL FOR NEXT