மெலோனியுடன் டேட்டிங்? : மறுத்த எலான் மஸ்க்!
மெலோனியும் எலான் மஸ்க்கும் டேட்டிங் செய்வதாக பரவிய கருத்துக்கு எலான் மஸ்க் மறுப்பு
இத்தாலி பிரதமர் மெலோனியும் எலான் மஸ்க்கும் டேட்டிங் செய்வதாக பரவிய கருத்துக்கு எலான் மஸ்க் மறுப்பு தெரிவித்துள்ளார்.
நியூயார்க்கில், செவ்வாய்க்கிழமையில் நடந்த ஒரு விருது விழாவில், இத்தாலி பிரதமர் ஜியோர்ஜியா மெலோனியும், டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க் இருவரும் கலந்து கொண்டிருந்தனர்.
இந்த நிகழ்ச்சியில், ஐரோப்பிய ஒன்றியத்திற்கு வலுவான ஆதரவளித்ததற்காகவும், இத்தாலியின் முதல் பெண் பிரதமராக ஆனதற்காகவும், மெலோனிக்கு அட்லாண்டிக் கவுன்சில் குளோபல் சிட்டிசன் விருது வழங்கப்பட்டது.
Advertisement
Advertisement
இந்த விருதினை மெலோனிக்கு எலான் மஸ்க் வழங்கினார். தொடர்ந்து, நிகழ்ச்சியில் பேசிய எலான் மஸ்க் ``வெளிப்புற அழகைவிட, உள்ளத்தால் இன்னும் அழகாக இருக்கும் ஒருவருக்கு பாராட்டை வழங்குவது என்பது ஒரு மரியாதை.
ஜியோர்ஜியா மெலோனி, இத்தாலியின் பிரதமராக அளப்பரியாத பணியை செய்துள்ளார். அவர் உண்மையானவர், நேர்மையானவர், உண்மையுள்ளவர்’’ என்று தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், அவர்கள் இருவரும் நிகழ்ச்சியில் சந்தித்து கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலானது. அதுமட்டுமின்றி, அவர்கள் இருவரும் டேட்டிங் செய்கின்றனரா? என்று சில நெட்டிசன்கள் கேள்வியும் எழுப்பினர். அவர்களுக்கு பதிலளிக்கும் விதமாக, எலான் மஸ்க், ``அவ்வாறு எதுவுமில்லை’’ என்று கூறிவிட்டார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.