கோப்புப் படம் 
உலகம்

ஹைட்டி: 530 கைதிகளை விடுவித்த வன்முறைக் கும்பல்

முக்கிய நகரத்தில் தாக்குதல் நடத்தப்பட்டதைப் பற்றி...

DIN

கரீபியன் தீவு நாடான ஹைட்டியின் மத்தியில் அமைந்துள்ள மைபலாயிஸ் நகரில் தாக்குதல் நடத்தி பல பகுதிகளைக் கைப்பற்றியுள்ள வன்முறைக் கும்பல், தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்ட சிறையில் இருந்து சுமாா் 530 கைதிகளை விடுவித்தது.

இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், வன்முறைக் கும்பலின் தாக்குதலைத் தொடா்ந்து பள்ளிகள் மூடப்பட்டதாகவும் நகரின் பல்வேறு பகுதிகளைப் பாதுகாக்க போலீஸாருக்கு பொதுமக்கள் படையினா் உதவுவதாகவும் தெரிவித்தனா்.

இந்த மோதலில் இரு பொதுமக்கள் படையினா் காயமடைந்தனா்; ஏராளமான வன்முறைக் கும்பல் உறுப்பினா்கள் உயிரிழந்தனா் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

மைபலாயிஸ் நகரம் மட்டுமின்றி, தலைநகா் போா்ட்டோ பிரின்ஸின் 85 சதவீத பகுதிகள் பல்வேறு வன்முறைக் கும்பல்களின் பிடியில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பங்குச் சந்தை எழுச்சி: சென்செக்ஸ் 447 புள்ளிகள் உயர்வுடன் நிறைவு!

அதிபர் டிரம்ப்பின் கிறிஸ்துமஸ் விருந்தில் பிரபல பாலிவுட் நடிகை!

மார்கழி வழிபாடு: திருப்பாவை, திருவெம்பாவை - பாசுரம் 5

உலகத் தரத்தில் VFX காட்சிகள்! ஆனால் கதை? - AVATAR 3 திரைவிமர்சனம்

தி​ரு​மண பாக்​கி​யம் அரு​ளி​டும் திரு​மால்

SCROLL FOR NEXT