வாஷிங்டன்: அமெரிக்காவில் தென்கிழக்கு ஆசிய நாடுகளிலிருந்து இறக்குமதியாகும் சூரிய சக்தி மின்சாதனங்களுக்கு 3,521% வரி விதிக்கப்பட்டுள்ளது.
கம்போடியா, வியத்நாம், தாய்லாந்து, மலேசியா ஆகிய தென்கிழக்கு ஆசிய நாடுகளிலிருந்து இறக்குமதியாகும் சூரிய சக்தி மின்சாதனங்களுக்கு 3,521 சதவீதம் வரி விதிக்கப்படுவதாக திங்கள்கிழமை(ஏப். 21) அமெரிக்க அரசு அறிவித்துள்ளது.
அமெரிக்காவில் சோலார் உபகரணங்கள் பல, வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படுவதன் காரணமாக உள்நாட்டு தொழில்துறை கடுமையாகப் பாதிக்கப்படுவதைத் தொடர்ந்து, வெளிநாட்டு சூரிய சக்தி சாதனங்கள் தயாரிப்பு நிறுவனங்கள் மீது முறைகேடு புகார் எழுந்தது.
இதன் அடிப்படையில் வர்த்தக துறையால் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் மேற்கண்ட வெளிநாடுகளைச் சேர்ந்த முக்கிய நிறுவனங்கள் முறைகேட்டில் ஈடுபட்டிருப்பது தெரிய வந்தது. இதையடுத்து, இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.