முகப்பு
உலகம்

தாய்லாந்து: கடலில் விழுந்து நொறுங்கிய காவல் விமானம்! 6 பேர் பலி!

தாய்லாந்து நாட்டில் காவல் விமானம் விபத்துக்குள்ளானதில் 6 பேர் பலியானதைப் பற்றி...

Updated On : 25 ஏப்ரல் 2025, 8:05 pm IST
விமான விபத்து நேரிட்ட இடத்தில் ஆய்வு செய்த காவல்துறை அதிகாரிகள்..
பகிர்:

தாய்லாந்து கடலில் காவல் விமானம் விழுந்து நொறுங்கியதில் 6 பேர் பரிதாபமாக பலியாகினர்.

தாய்லாந்தின் ஹுவா ஹின் மாவட்டத்தில் இன்று (ஏப்.25) காலை 8 மணியளவில் சிறிய ரக காவல் விமானத்தில் அந்நாட்டு காவல் துறை அதிகாரிகள் 6 பேர் பாராசூட் பயிற்சியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது, பிரசுவாப் கிரி கான் மாகாணத்திலுள்ள ஹுவா ஹின் விமான நிலையத்துக்கு அருகிலுள்ள கடல்கரையில் அந்த விமானம் விழுந்து நொறுங்கியது. இந்த விபத்தில் அந்த விமானத்தில் பயணித்தவர்களில் 5 பேர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள்.

Advertisement

Advertisement

இந்நிலையில், விபத்தில் படுகாயமடைந்த காவல் துறை அதிகாரி ஒருவர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இருப்பினும், அவர் சிகிச்சை பலனின்றி பலியானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விபத்துக்கான காரணம் என்னவென்று தெரியாத நிலையில், அந்த விமானத்தின் கருப்புப் பெட்டி மீட்கப்பட்டதுடன் ஆதாரங்கள் சேகரிக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தாய்லாந்து அதிகாரிகள் கூறியுள்ளனர்.

இதையும் படிக்க: பசிபிக் பெருங்கடலில் 6.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்! ஈக்வடாரில் சுனாமி எச்சரிக்கை?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments