தில்லியில் 3 பேர் பலியான துக்ளகாபாத் குடியிருப்பு தீ விபத்தில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்!
தில்லி துக்ளகாபாத் குடியிருப்பில் அண்மையில் நிகழ்ந்த தீ விபத்து குறித்து அதிர்ச்சித் தகவல் வெளிவந்துள்ளது.
தில்லி துக்ளகாபாத் குடியிருப்பில் அண்மையில் நிகழ்ந்த தீ விபத்து குறித்து அதிர்ச்சித் தகவல் வெளிவந்துள்ளது.
3 பேர் பலியாக காரணமான அந்த பயங்கர தீ விபத்து தற்செயலாக நடந்தது அல்ல. இரு உறவினர்களுக்கு இடையே நிலவிய பணத் தகராறு காரணமாக திட்டமிட்டு வைக்கப்பட்ட தீ என்பதை போலீஸார் கண்டறிந்துள்ளனர். இதுதொடர்பாக நிரஞ்சன் (33), அவரது சகோதரர் ராஜ்குமார் (27) மற்றும் சரிதா (27) ஆகிய மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் 17 வயது சிறுமி ஒருவரும் காவலில் எடுக்கப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டுள்ள சரிதாவும் அந்தச் சிறுமியும், குற்றஞ்சாட்டப்பட்ட இரு ஆண்களுடன் காதலில் இருந்ததாகக் கூறப்படுகிறது.
ஜூன் 12 நள்ளிரவு அந்த கட்டடத்தின் தரைத்தளத்தில் நிறுத்தப்பட்டிருந்த ஒரு இருசக்கர வாகனத்துக்கு தான் தீ வைத்ததாக அந்த மைனர் சிறுமி ஒப்புக்கொண்டதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுளளது. அந்தத் தீ மிக வேகமாக ஐந்தாவது மாடி வரை பரவி, கட்டடம் முழுவதையும் சூழ்ந்துகொண்டது. ஆரம்பத்தில் விபத்து மற்றும் கவனக்குறைவால் ஏற்பட்ட தீ என்று நம்பப்பட்ட இந்த வழக்கின் விசாரணை, தீ விபத்து ஏற்படுவதற்குச் சற்று முன்பு ஒரு சிறுமி அந்த கட்டடத்திற்குள் நுழையும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி புதிய திருப்பத்தை ஏற்படுத்தியது.
Advertisement
Advertisement
இந்த சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில், அந்த மைனர் சிறுமி அடையாளம் காணப்பட்டு விசாரணைக்காகக் காவலில் எடுக்கப்பட்டார். விசாரணையின் போது, அந்த கட்டடத்தின் ஐந்தாவது மாடியில் வசிக்கும் நிரஞ்சனின் உறவினரான தீபக் என்பவருக்குச் சொந்தமான இருசக்கர வாகனத்திற்கு தீ வைக்குமாறு சரிதா தன்னைத் தூண்டியதாக அந்தச் சிறுமி தெரிவித்தார். மேலும், அவர்தான் தனக்கு பெட்ரோலும் தீப்பெட்டியும் கொடுத்ததாகவும் அந்தச் சிறுமி போலீஸாரிடம் தெரிவித்துள்ளார்.
வேறு ஒரு வழக்கில் சமீபத்தில் சிறையிலிருந்து விடுதலையான நிரஞ்சனுக்கும், தீபக்கிற்கும் இடையே நீடித்து வந்த பணத் தகராறே இந்த தீ வைப்புச் சம்பவத்திற்குக் காரணம் என்று கூறப்படுகிறது. இதையடுத்து, குற்றஞ்சாட்டப்பட்ட 3 பேரையும் கைது செய்துள்ள போலீஸார், அவர்கள் மீது கடுமையான பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளது. இந்தச் சதியில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா என்பது குறித்தும் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
தென்கிழக்கு தில்லியின் கோவிந்த்புரி பகுதியில் உள்ள ஐந்து மாடி குடியிருப்பு கட்டடத்தில் வெள்ளிக்கிழமை அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் பேச்சு குறைபாடுள்ள பெண் உள்பட ஒரே குடும்பத்தைச் சோ்ந்த மூன்று போ் உயிரிழந்தனா், மேலும் 70 வயது மூதாட்டி உள்பட இருவா் படுகாயமடைந்தனா். கட்டடத்தில் இருந்து எட்டு போ் மீட்கப்பட்டு, சிகிச்சைக்காக சஃப்தா்ஜங் மருத்துவமனை மற்றும் எய்ம்ஸ் அதிா்ச்சி சிகிச்சை மையத்திற்கு மாற்றப்பட்டனா்.
பலியானவர்கள், கட்டடத்தின் மூன்றாவது மாடியில் வசித்து வந்த கைப்பேசி பழுதுபாா்க்கும் கடை நடத்தி வந்த பங்கஜ் (28), அவரது பேச்சு குறைபாடுள்ள தாய் குட்டி (50) மற்றும் அவரது சகோதரி சோனி (20) என அடையாளம் காணப்பட்டனனர். பங்கஜின் மற்றொரு சகோதரி மோனி (18) மற்றும் அவரது தாய்வழி பாட்டி ஆகியோா் படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனா். கட்டடத்தில் சுமாா் ஒன்பது குடும்பங்கள் வசித்து வந்ததாகவும், ஆனால் சம்பவம் நடந்த நேரத்தில் அவா்களில் பலா் விடுமுறையில் வெளியூா் சென்றிருந்ததாகவும் குடியிருப்பாளா்கள் தெரிவித்தனா்.
அக்கம்பக்கத்தினா் மற்றும் உள்ளூா்வாசிகளின் விரைவான நடவடிக்கையுடன் இணைந்து, இது அதிக உயிரிழப்புகளைத் தடுக்க உதவியது என்று அவா்கள் கூறினா். காவல்துறையினரும் உள்ளூா் மக்களும் மற்ற மாடிகளில் வசித்தவா்களை சரியான நேரத்தில் மீட்டனா்.
The massive fire that left three people dead in a residential building in south Delhi's Tughlakabad area last Friday wasn't an accident.