FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
உலகம்

வியத்நாம் படகு விபத்தில் உயிரிழந்த 10 தமிழர்கள்: யார் யார்?

வியத்நாமில் சுற்றுலாப் படகு விபத்தில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 10 பேர் பலியான விபரம் வெளியாகியுள்ளது.

Updated On : 11 ஜூலை 2026, 7:35 pm IST
வியத்நாம் படகு விபத்து - X
பகிர்:

வியத்நாமில் சுற்றுலாப் படகு விபத்தில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 10 பேர் உள்பட 15 பேர் பலியாகியுள்ளனர்.

தெற்கு வியத்நாமில் பிரபல சுற்றுலா இடமான, பு குவாக் தீவு (Phu Quoc Island) அருகே, சுற்றுலாவுக்குச் சென்ற 32 இந்தியர்கள் படகு சவாரிக்குச் சென்றுள்ளனர். அவர்களுடன் 4 படகு ஊழியர்களும் இருந்தனர். இன்று பகல் 11.30 மணியளவில் கடலில் சென்று கொண்டிருக்கும்போது படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இதில் 21 பேர் பத்திரமாக மீட்கப்பட்ட நிலையில் 15 பேர் பலியாகினர். விபத்துக்குள்ளான படகில் சுமார் 20 தமிழர்கள் இருந்திருக்கின்றனர். இவர்களில் பலரும் லாவா மொபைல் நிறுவனத்தின் சார்பில் அழைத்துச் செல்லப்பட்டவர்கள் என்று தகவல் வெளியாகியுள்ளது.

Advertisement

Advertisement

இந்த நிலையில் படகு விபத்தில் பலியானவர்களில் 10 தமிழர்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை வியத்நாமிற்கான இந்திய தூதரகம் தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் தளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளது. மேலும் பலியானவர்களில் 3 பேர் ஆந்திரம், 2 பேர் கர்நாடகத்தைச் சேர்ந்தவர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பலியான தமிழர்கள் முழு விபரம்:

1. செந்தில் குமார்

2. முருக பிரபு

3. ஸ்ரீதர்

4. ஷேக் அப்துல்லா

5. பாலாஜி

6. வினய குமார்

7. ரவிசங்கர்

8. சந்தோஷ் குமார்

9. பாபு

10. அழகுராஜன்.

உதவி எண்கள் அறிவிப்பு

வியத்நாம் படகு விபத்து தொடர்பாக ஹோ சி மின் (Ho Chi Minh) நகரத்தில் அவசர கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டு, +84 36 281 7930, +84 91 552 37 14, +84 33 452 0414 ஆகிய உதவி எண்களை மத்திய அரசு அறிவித்துள்ளது.

மேலும், ஹனோய் பகுதியில் உள்ள கட்டுப்பாட்டு அறையை தொடர்புகொள்ள +84 91 308 9165 என்ற தொடர்பு எண் வழங்கப்பட்டுள்ளது.

summary

Fifteen people, including 10 from Tamil Nadu, have been killed in a tourist boat accident in Vietnam.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments