வியட்நாமில் படகு கவிழ்ந்து விபத்து! 15 இந்தியர்கள் பலி எனத் தகவல்
வியட்நாமில் இந்தியர்கள் சென்ற படகு கவிழ்ந்து விபத்து ஏற்பட்டுள்ளது பற்றி...
வியட்நாம் நாட்டில் பூ குவாக் தீவு அருகே 32 இந்தியர்களுடன் சென்ற படகு கவிழ்ந்து விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் குறைந்தது 15 பேர் பலியாகியிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.
தெற்கு வியட்நாமில் உள்ள பூ குவாக் தீவு (Phu Quoc Island) அருகே கடலில் படகு சவாரிக்கு இந்திய சுற்றுலாப் பயணிகள் 32 பேர், 3 ஊழியர்கள் சென்றுள்ளனர்.
அப்போது திடீரென படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் 18 பேர் பத்திரமாக மீட்கப்பட்ட நிலையில் மீதமுள்ளவர்களை தேடும் பணி தீவிரம் அடைந்துள்ளது. கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளான படகில் தமிழர்களும் இருந்ததாகக் கூறப்படுகிறது.,
Advertisement
Advertisement
இதையடுத்து வியட்நாம் படகு விபத்து தொடர்பாக மத்திய அரசு, +84 36 281 7930 மற்றும் +84 91 552 3714 ஆகிய உதவி எண்களை அறிவித்துள்ளது.
Boat carrying several Indian tourists capsizes in Vietnam
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.