முகப்பு
உலகம்

ராணுவ தாக்குதலுக்கு இந்தியா தயாராகிவிட்டது; அணு ஆயுதங்கள் பயன்படுத்தப்படும்: பாகிஸ்தான் எச்சரிக்கை!

அணு ஆயுதங்களைப் பயன்படுத்த தயங்க மாட்டோம் - பாகிஸ்தானின் பாதுகாப்புத்துறை அமைச்சர்

Updated On : 28 ஏப்ரல் 2025, 11:00 pm IST
விண்ணில் சீறிப் பாயும் ஏவுகணை - கோப்புப்படம்
பகிர்:

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்த இந்தியா தயாராகிவிட்டதாகவும் இந்த சூழலில் தங்களிடமிருக்கும் அணு ஆயுதங்களைப் பயன்படுத்த தயங்க மாட்டோம் என்று பாகிஸ்தானின் பாதுகாப்புத்துறை அமைச்சர் தெளிவுபடுத்தியிருக்கிறார்.

பஹல்காம் தாக்குதலுக்கு அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், ரஷிய அதிபர் விளாதிமீர் புதின் உள்பட பல்வேறு நாடுகளின் தலைவர்களும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில், பாகிஸ்தான் தமது நிலைப்பாட்டை இன்று(ஏப். 28) தெளிவுபடுத்தியிருக்கிறது.

பஹல்காம் தாக்குதலுக்கு பின், இந்தியா பாகிஸ்தானுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை எடுத்துள்ளது. முக்கியமாக சிந்து நதி நீர் ஒப்பந்தம் நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், பஹல்காம் தாக்குதலுக்கும் தங்களுக்கும் தொடர்பில்லை என்று விளக்கியுள்ளது பாகிஸ்தான்.

Advertisement

Advertisement

இதனிடையே, இஸ்லாமாபாத்தில் இன்று செய்தியாளர்களுடன் அமைச்சர் கவாஜா முஹம்மது ஆசிஃப் பேசியதாவது, “பாகிஸ்தான் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்கிறது. இந்தியா ராணுவ தாக்குதலுக்கு ஆயத்தமாக இருப்பது குறித்து இன்று நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் விரிவாக பேசினோம். எங்கள் நாட்டுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டால் மட்டுமே அணு ஆயுதங்களைப் பயன்படுத்துவோம்” என்றார். போர்ப்பதற்றத்தை தணிக்க அரபு நாடுகள், சீனா, பிரிட்டன், அமெரிக்காவிடம் பாகிஸ்தான் தொடர்புகொண்டு பேசி வருவதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments