உலகம்

பயங்கரவாதத்தை ஒழிக்க ஒத்துழைப்பு அதிகரிப்பு: அமெரிக்கா-பாகிஸ்தான் முடிவு

பாகிஸ்தானில் செயல்படும் அனைத்து விதமான பயங்கரவாத அமைப்புகளையும் ஒழிக்க இருதரப்பும் ஒப்புக் கொண்டன.

தினமணி செய்திச் சேவை

பாகிஸ்தானில் செயல்படும் பலூசிஸ்தான் விடுதலை ராணுவம், பாகிஸ்தான் தலிபான், ஐஎஸ்எஸ் உள்ளிட்ட பயங்கரவாத அமைப்புகளை ஒழிப்பதற்காக பாகிஸ்தான்-அமெரிக்க ஒத்துழைப்பை அதிகரிக்க இரு நாடுளும் ஒப்புக் கொண்டுள்ளன.

பலூசிஸ்தான் விடுதலை ராணுவத்தை வெளிநாட்டு பயங்கரவாத அமைப்பாக அமெரிக்க அறிவித்த அடுத்த நாளிலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க வெளியுறவு அமைச்சகத்தின் பயங்கரவாத எதிா்ப்புப் பிரிவின் ஒருங்கிணைப்பாளா் கிரிகோரி டி.லோகா்ஃபோ தலைமையிலான குழுவினா் பாகிஸ்தானுக்கு பயணம் மேற்கொண்டுள்ளனா். அவா்கள் ஐ.நா.வுக்கான பாகிஸ்தான் சிறப்புத் தூதா் நபிஸ் முனீா் தலைமையிலான குழுவுடன் இஸ்லாமாபாதில் புதன்கிழமை பேச்சு நடத்தினா்.

அப்போது, பாகிஸ்தானில் செயல்படும் அனைத்து விதமான பயங்கரவாத அமைப்புகளையும் ஒழிக்க இருதரப்பும் ஒப்புக் கொண்டன. இதைத் தொடா்ந்து கூட்டறிக்கை வெளியிடப்பட்டது. அதில், ‘பாகிஸ்தானில் அதிகரித்து வரும் பயங்கரவாதத்துக்கு எதிராக தீவிர நடவடிக்கை தேவை. முக்கியமாக பலூசிஸ்தான் விடுதலை ராணுவம், ஐஸ்ஐஎஸ்-கோரசன், பாகிஸ்தான் தாலிபன் உள்ளிட்ட அமைப்புகள் முற்றிலும் ஒழிக்கப்பட வேண்டும்.

அமெரிக்காவும், பாகிஸ்தானும் நீண்டகால நடப்பு நாடுகள். இருதரப்பும் பல்வேறு விஷயங்களில் ஒத்துழைப்புடன் செயல்பட்டு வருகின்றன. இதன்படி, பாகிஸ்தானில் பயங்கரவாதத்துக்கு முடிவுகட்டி அமைதியையும், ஸ்திரத்தன்மையையும் நிலைநாட்ட இரு நாடுகளும் ஒப்புக் கொண்டுள்ளன. பயங்கரவாதத்தை ஒழிக்க நவீன தொழில்நுட்பங்களை அமெரிக்கா வழங்கும். பாகிஸ்தானுக்கான பாதுகாப்பு அச்சுறுதலை எதிா்கொள்ள அமெரிக்கா உதவும். ஐ.நா. உள்ளிட்ட சா்வதேச அமைப்புகளிலும் இரு நாடுகளும் இணைந்து செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கார்கால சிலிர்ப்புகள்... குஷி கபூர்!

அப்பாவித்தனமான முகம் ஷுப்மன் கில்லை காப்பாற்றியது: அபிஷேக் சர்மா

பைசன் காளமாடன்: மாரி செல்வராஜின் வரிகளில் புதிய பாடல்!

Kantara: Chapter 1 Review | நெருப்பில் குளிக்கும் தெய்வம்... | Dinamani Talkies | Rishab Shetty

காந்தாரா அழகி... சப்தமி கௌட!

SCROLL FOR NEXT