உலகின் மிகவும் கனிவான நீதிபதி என மக்களால் அறியப்பட்ட நீதிபதி ஃபிராங் கேப்ரியோ உடல் நலக் குறைவால் காலமானார்.
அமெரிக்காவைச் சேர்ந்த மாநகராட்சி நீதிபதி ஃபிராங் கேப்ரியோ (வயது 88). அந்நாட்டின், காட் இன் பிரோவிடென்ஸ் எனும் பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சியில் இவர் விசாரிக்கும் போக்குவரத்து வழக்குகள் ஒளிப்பரப்பட்டு வந்தன.
அப்போது, இவர் விசாரித்த வழக்குகளில், சூழ்நிலைக் காரணமாக போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபட்டோருக்கு, தண்டனை வழங்காமல் மன்னித்து விடுதலைச் செய்ததுடன், அவர்களுக்குத் தேவையான உதவிகளை பெருவதற்கும் வழி வகைச் செய்து வந்தார்.
இதனால், மக்களிடையே மிகவும் பிரபலமான நீதிபதி ஃபிராங், கடந்த சில மாதங்களாக கணையப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில், நீதிபதி ஃபிராங் கேப்ரியோ, இன்று (ஆக.21) சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக, அவரது குடும்பத்தினர் அறிவித்துள்ளனர். நீதிபதி ஃபிராங் கேப்ரியோவின் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் தங்களது இரங்கல்களைத் தெரிவித்து வருகின்றனர்.
இதையும் படிக்க: எஃப்பிஐ தேடி வந்த பெண் குற்றவாளி இந்தியாவில் கைது! மகனைக் கொன்றவர்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.