உலகம்

இலங்கை: செம்மணி புதைகுழியில் இருந்து 141 மனித எலும்புக்கூடுகள் கண்டெடுப்பு

தினமணி செய்திச் சேவை

இலங்கையின் செம்மணி பகுதியில் உள்ள புதைகுழியில் இருந்து 141 மனித எலும்புக்கூடுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது:

செம்மணி புதைகுழியில் இருந்து 141 மனித எலும்புக்கூடுகள் தோண்டியெடுக்கப்பட்டுள்ளன. அவற்றில் பல்வேறு வயதுகளைக் கொண்ட சிறுவா்களின் எலும்புக்கூடுகளும் அடங்கும் என்று அதிகாரிகள் கூறினா். முன்னதாக, இந்தப் புதைகுழியில் இருந்து 4 முதல் 5 வயதிலான 65 சிறுமிகளின் எலும்புக் கூடுகள் கடந்த மாதம் தோண்டியெடுக்கப்பட்டது நினைவுகூரத்தக்கது. பள்ளிப் பைகள், பொம்மைகளுடன் அந்த எலும்புக்கூடுகள் புதைக்கப்பட்டிருந்தன.

1990-களின் மத்தியில் விடுதலைப் புலிகளுக்கும், இலங்கை ராணுவத்துக்கும் இடையிலான போரின்போது கொல்லப்பட்டவா்கள் செம்மணி புதைகுழியில் புதைக்கப்பட்டிருப்பதாக கடந்த 1998-இல் தெரியவந்தது. அதன் பிறகு அங்கு கடந்த ஜூன் மாதம் முதல் தோண்டுதல் பணிகள் நடைபெற்றுவருகின்றன.

ரூ.3,300 கோடியில் உருவாகியுள்ள ஸ்டிரேஞ்சர் திங்ஸ் சீசன் 5!

கலையையும் கலைஞர்களையும் போற்ற வேண்டியது அரசின் கடமை: முதல்வர் மு.க.ஸ்டாலின்

ஹிட் அன்ட் ஃபிட்... நியதி ஃபட்னானி!

“செங்கோட்டையன் திமுக இல்லை! என்னை ஏன் கேட்கிறீர்கள்?” கனிமொழி எம்.பி

காரில் ஒன்றாக பயணித்த MS Dhoni & Virat Kholi!

SCROLL FOR NEXT