கிளர்ச்சிக் குழு தாக்குதலால் கோமா நகரில் இருந்து புலம்பெயர்வோர் கோப்புப் படம்
உலகம்

காங்கோ: கிளர்ச்சிக் குழு தாக்குதலால் ஒரு வாரத்தில் 773 பேர் பலி!

காங்கோவில் 25,000 இந்தியர்கள் பாதுகாப்பாக இருப்பதாகவும் வெளியுறவுத் துறை அமைச்சகம் தகவல்

DIN

காங்கோ குடியரசில் கிளர்ச்சிக் குழுவின் தாக்குதலால் ஒரு வாரத்தில் 773 பேர் பலியாகினர்.

தாது வளம் நிறைந்த காங்கோவில் கட்டுப்பாட்டுக்காக போராடும் நூற்றுக்கணக்கான கிளா்ச்சிக் குழுக்களில் எம்23-யும் ஒன்று. கோமா நகரிலும், அதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் எம்23 நடத்திய தாக்குதலில் ஒரு வாரத்தில் மட்டும் 773 பேர் வரையில் பலியானதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

அதுமட்டுமின்றி, கோமா மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து 8 லட்சத்துக்கும் மேற்பட்டோர் இடம்பெயர்ந்துள்ளனர்.

காங்கோவில் சுமார் 25,000 இந்தியர்கள் உள்ள நிலையில், அவர்களில் சுமார் ஆயிரம் பேர் கோமா நகரில் இருப்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும், இந்தியர்கள் அனைவரும் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டிருப்பதாக வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அமெரிக்கா வரி விதிப்பால் ஆட்டோமொபைல் உதிரிபாக உற்பத்தி 8% பாதிப்பு!

பில் சால்ட் அதிரடி: டி20 தொடரை வெற்றியுடன் தொடங்கிய இங்கிலாந்து!

அன்பே வலிமையின் ஆதாரம்: வாழ்த்துகளுக்கு நன்றி கூறிய பிரதமர்!

சத்தீஸ்கரில் 12 மாவோயிஸ்டுகள் சரண்!

102 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸி.யை வீழ்த்தி இந்தியா அபாரம்; சமனில் ஒருநாள் தொடர்!

SCROLL FOR NEXT