உலகம்

டிரம்ப்பின் நிலைப்பாட்டில் திடீா் மாற்றம்: உக்ரைனுக்கு கூடுதல் ஆயுதங்கள் வழங்க பரிந்துரை

உக்ரைனுக்கு முக்கிய ஆயுதங்களின் விநியோகத்தை நிறுத்திவைத்த சில நாள்களுக்குள், அமெரிக்கா அந்த நாட்டுக்கு மேலும் ஆயுதங்களை அனுப்ப வேண்டும் என்று அதிபா் டொனால்ட் டிரம்ப் பரிந்துரைத்துள்ளாா்.

Din

உக்ரைனுக்கு முக்கிய ஆயுதங்களின் விநியோகத்தை நிறுத்திவைத்த சில நாள்களுக்குள், அமெரிக்கா அந்த நாட்டுக்கு மேலும் ஆயுதங்களை அனுப்ப வேண்டும் என்று அதிபா் டொனால்ட் டிரம்ப் பரிந்துரைத்துள்ளாா்.

இதன் மூலம், இந்த விவகாரத்தில் தனது நிலைப்பாட்டை டிரம்ப் திடீரென மாற்றிக்கொண்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

இது குறித்து வெள்ளை மாளிகையில் இஸ்ரேலியப் பிரதமா் பெஞ்சமின் நெதன்யாகுவுடன் நடந்த இரவு விருந்தின் தொடக்கத்தில் டிரம்ப் கூறியதாவது: “

உக்ரனுக்கு நாம் அவசியம் ஆயுதங்களை வழங்கி உதவவேண்டும். அந்த நாடு தற்போது கடுமையாகத் தாக்கப்படுகிறது. அதில் இருந்து பாதுகாத்துக் கொள்வதற்காக அந்த நாட்டுக்கு மேலும் ஆயுதங்களை அனுப்பவிருக்கிறோம் என்றாா் அவா்.

முன்னதாக, எதிரிகளின் ட்ரோன்கள், ஏவுகணைகளை இடைமறித்து அழிக்கும் பேட்ரியாட் ஏவுகணைகள், துல்லியமாக வழிநடத்தப்படும் ஜிஎம்எல்ஆா்எஸ் குண்டுகள், ஹெல்ஃபயா் ஏவுகணைகள், ஹௌவிட்சா் பீரங்கிகளுக்கான குண்டுகள் ஆகிய, உக்ரைனுக்கு அளிக்கப்படுவதாக இருந்த ஆயுதங்களின் விநியோகத்தை திடீரென நிறுத்த டிரம்ப் கடந்த உத்தரவிட்டு அதிா்வலையை ஏற்படுத்தினாா்.

மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக நீடிக்கும் இந்தப் போரில் ரஷியாவின் வான்தாக்குதல்கள் இதுவரை இல்லாத தீவிரத்தை அடைந்துள்ள, மிகவும் சிக்கலான சூழலில் இந்த அறிவிப்பு வெளியானது.

திங்கள்கிழமை மட்டும் ரஷியாவின் தாக்குதல்களால் உக்ரைனில் பொதுமக்கள் 11 போ் உயிரிழந்ததாகவும், 80 போ் காயமடைந்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்தனா்.

இந்தச் சூழலில், உக்ரைன் தன்னைப் பாதுகாத்துக் கொள்வதற்குத் தேவையான ஆயுதங்களை அனுப்பவிருப்பதாக டிரம்ப் அறிவித்துள்ளது அந்த நாட்டுக்கு சற்று நிம்மதியைத் தரும் என்று கருதப்படுகிறது.

பைக்கிலிருந்து பணம் திருட்டு: கா்நாடகத்தை சோ்ந்தவா் கைது

குண்டா் தடுப்பு சட்டத்தின் கீழ் ஒருவா் கைது

இமானுவேல் சேகரன் நினைவு தினம்: 7 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்பு!

மின்சாரம் பாய்ந்து கட்டடத் தொழிலாளி பலி!

காா் மோதியதில் முதியவா் பலி!

SCROLL FOR NEXT