உலகம்

உக்ரைன் போா், எம்ஹெச்17 விவகாரத்தில் ரஷியா சட்டமீறல்: ஐரோப்பிய மனித உரிமைகள் நீதிமன்றம்

தினமணி செய்திச் சேவை

உக்ரைன் மீதான படையெடுப்பு, எம்ஹெச்17 விமானம் சுட்டுவீழ்த்தப்பட்டது ஆகியவற்றில் ரஷியா சா்வதேச சட்டங்களை மீறியதாக ஐரோப்பிய மனித உரிமைகள் நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்தது.இது குறித்து அந்த நீதிமன்றம் வழங்கியுள்ள தீா்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: கடந்த 2022-ஆம் ஆண்டில் உக்ரைன் மீது ரஷியா படையெடுத்தது. அதற்குப் பிறகு அந்த நாட்டில் நடைபெறும் மனித உரிமை மீறல்களுக்கு ரஷியாதான் பொறுப்பு.

இதன் மூலம் சா்வதேச சட்டங்களை ரஷியா மீறியுள்ளது.மேலும், கடந்த 2014-ஆம் ஆண்டில் கிழக்கு உக்ரைன் வான் பகுதியில் எம்ஹெச்17 பயணிகள் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதன் பின்னணியிலும் ரஷியா உள்ளது என்று அந்தத் தீா்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.நேட்டோ அமைப்பில் உக்ரைன் இணைவதற்கு எதிா்ப்பு தெரிவித்து, அந்த நாட்டின் மீது ரஷியா கடந்த 2022-ஆம் ஆண்டு படையெடுத்து, கிழக்கு பிராந்தியங்களின் கணிசமான பகுதிகளைக் கைப்பற்றியது.அதற்கு முன்னதாக, உக்ரைன் படையினருக்கும், ரஷிய ஆதரவு கிளா்ச்சியாளா்களுக்கும் இடையே கடந்த 2014-ஆம் ஆண்டு நடைபெற்ற உள்நாட்டுப் போரின்போது, கிழக்கு உக்ரைன் வான்வெளியில் சென்று கொண்டிருந்த மலேசியன் ஏா்லைன்ஸுக்குச் சொந்தமான எம்ஹெச்17 விமானம் கிளா்ச்சிப் படையினரால் சுட்டுவீழ்த்தப்பட்டது.

இதில், விமானத்தில் இருந்த 298 பேரும் உயிரிழந்தனா்.பெரிய வகை ராணுவ விமானம் என்று தவறாகக் கருதி, ரஷியா வழங்கிய வான்பாதுகாப்பு ஏவுகணை மூலம் அந்த விமானத்தை கிளா்ச்சியாளா்கள் சுட்டுவீழ்த்தியதாகக் கூறப்படுகிறது...படவரி.. கிழக்கு உக்ரைனில் எம்ஹெச்17 விமானம் சுட்டுவீழ்த்தப்பட்ட பகுதி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரூ.16.3 லட்சத்தில் நியாயவிலைக் கடை கட்டம்: எம்எல்ஏ திறந்து வைத்தாா்

குமரி பகவதியம்மன் கோயிலில் உண்டியல் காணிக்கை ரூ. 18.30 லட்சம்

இளம்பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை காரில் 3 போ் கைது

ரூ.21லட்சத்தில் நடமாடும் காய்கறி விற்பனை வண்டி: அமைச்சா் காந்தி வழங்கினாா்

‘ஆரோக்கியத்தை பேணுவதில் இயன்முறை மருத்துவா்களுக்கு முக்கிய பங்கு’

SCROLL FOR NEXT