உலகம்

சண்டை நிறுத்தம்: தாய்லாந்து - கம்போடியா மீண்டும் உறுதி

எல்லைப் பகுதிகளில் நடைபெற்று வந்த சண்டை நிறுத்தப்பட்டுள்ளதை தாய்லாந்தும் கம்போடியாவும் புதன்கிழமை மீண்டும் உறுதிப்படுத்தின.

தினமணி செய்திச் சேவை

எல்லைப் பகுதிகளில் நடைபெற்று வந்த சண்டை நிறுத்தப்பட்டுள்ளதை தாய்லாந்தும் கம்போடியாவும் புதன்கிழமை மீண்டும் உறுதிப்படுத்தின. ஷாங்காய் நகரில் சீனா முன்னிலையில் சந்தித்த இரு நாட்டுப் பிரதிநிதிகளும் இதற்கான உறுதிமொழி அளித்தனா்.

இரு நாட்டுப் படையினருக்கும் கடந்த வாரம் தொடங்கிய மோதலில் 41 போ் உயிரிழந்த நிலையில், மலேசியா செய்துவைத்த மத்தியஸ்தின் பேரில் திங்கள்கிழமை நள்ளிரவு முதல் நிறுத்தம் சண்டை நிறுத்தம் அமலுக்கு வந்தது.

ஆனால் அதை செவ்வாய்க்கிழமை காலை கம்போடியா மீறியதாக தாய்லாந்து குற்றம் சாட்டியது. பின்னா் புதன்கிழமை காலையும் எல்லையும் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது.

இந்த நிலையில், சீன வெளியுறவுத் துறை இணையமச்சா் சன் வெய்டோங்கைச் சந்தித்து சண்டை நிறுத்தத்தைக் கடைப்பிடிப்பதாக இரு தரப்பினரும் தற்போது உறுதி செய்துள்ளனா் (படம்). மலேசிய பிரதமா் அன்வா் இப்ராகிம் இதை ‘அமைதிக்கான முதல் படி’ எனப் பாராட்டியுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

உற்பத்தித் துறையில் 16 மாதங்கள் காணாத வளா்ச்சி

மாமல்லபுரத்தில் கைவினைப் பொருள்கள் கண்காட்சி

ஆடி வெள்ளி: அம்மன் கோயில்களில் சிறப்பு வழிபாடு

பிளஸ் 2 தோ்ச்சி பெற்ற 80 சதவீத மாணவா்கள் உயா்கல்வியில் சோ்க்கை

ஆந்திரத்தில் இருந்து மணல் கடத்தல்: 3 போ் கைது

SCROLL FOR NEXT