உலகம்

கொலம்பியா: அதிபர் வேட்பாளர் மீது துப்பாக்கிச் சூடு; உயிருக்கு ஆபத்து?

கொலம்பியா அதிபர் வேட்பாளர் மிகுவல் உரிபே மீது துப்பாக்கிச்சூடு; உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதி

DIN

கொலம்பியா நாட்டின் அதிபர் வேட்பாளர் மிகுவல் உரிபே மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதில், உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தென் அமெரிக்காவின் கொலம்பியாவில் அடுத்தாண்டு அதிபர் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், பிரசாரங்களும் சூடுபிடித்துள்ளன. இந்த நிலையில், சனிக்கிழமையில் பொகோட்டாவில் பிரசாரம் மேற்கொண்டிருந்த ஜனநாயக மையக் கட்சியைச் சேர்ந்த அதிபர் வேட்பாளர் மிகுவல் மீது மர்ம நபர் ஒருவர் துப்பாக்கிச்சூடு நடத்தினார்.

இந்தத் துப்பாக்கிச்சூடு தாக்குதலில், மிகுவலின் தலையில் பலத்த காயமடைந்து, உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த சம்பவமானது, கொலம்பியா முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே, சந்தேகிக்கப்படும் நபர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

மிகுவலின் மீதான துப்பாக்கிச்சூடு குறித்து அறிந்த அந்நாட்டு அதிபர் குஸ்டாவோ பெட்ரோ, மிகுவலின் குடும்பத்துக்கு உறுதுணையாகவும் ஆறுதலாகவும் இருப்பதாகக் கூறினார்.

1991 ஆம் ஆண்டில் மிகுவலின் தாயாரும் பத்திரிகையாளருமான டயானா டர்பே, போதைப்பொருள் கடத்தல்காரர் பாப்லோ எஸ்கோபரால் கடத்தப்பட்டு, படுகொலை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: சொல்லப் போனால்... திட்டமிடப்படாத நெரிசல் கொலைகள்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அமைச்சா் ஐ.பெரியசாமி வீட்டில் சோதனை: சொத்து, முதலீட்டு ஆவணங்கள் பறிமுதல்- அமலாக்கத் துறை தகவல்

அரூரில் ரூ.10 லட்சத்துக்கு பருத்தி ஏலம்

அலிகா் பல்கலைக்கழக துணைவேந்தா் நியமன வழக்கு: உச்சநீதிமன்ற நீதிபதி வினோத்சந்திரன் விலகல்

வீட்டு வசதி வாரியத்தில் வட்டி தள்ளுபடி சலுகை

பாகிஸ்தான்: மேலும் 2 பேருக்கு போலியோ

SCROLL FOR NEXT