மியான்மரில் இன்றும்(மார்ச் 30) மியான்மரில் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. இந்த நில அதிர்வானது ரிக்டர் அளவில் 5.1-ஆக பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மண்டலாய் நகரிலிருந்து வடமேற்கே 13 மைல் தொலைவில் இந்த நிலநடுக்கத்தின் மையப்பகுதி நிலைகொண்டிருந்ததாகவும் அந்த மையம் குறிப்பிட்டுள்ளது.
மியான்மா் மற்றும் அதன் அண்டை நாடான தாய்லாந்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட உயிரிழப்புகளை ஏற்படுத்தியுள்ள மிக சக்திவாய்ந்த நிலநடுக்கம் வெள்ளிக்கிழமை(மார்ச் 28) ஏற்பட்டது.
அமெரிக்க புவியியல் ஆய்வு மைய புள்ளிவிவரங்களின்படி, சகாய்ங் நகரின் வடமேற்கே 16 கி.மீ. தொலைவில் வெள்ளிக்கிழமை(மார்ச் 28) பகல் 12 மணியளவில் முதல் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டா் அளவுகோலில் 7.7 புள்ளியாகப் பதிவானது. அதைத் தொடா்ந்து, வலுவான இரண்டாவது நிலநடுக்கம் ஏற்பட்டது. அது 6.4 புள்ளியாகப் பதிவானது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் 3-ஆவது நாளாக இன்றும் நில அதிர்வு உணரப்பட்டுள்ளதால் மக்கள் பீதியடைந்துள்ளனர்.
இதனிடையே, நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் மீட்புப்பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இந்தியா உள்பட பிற நாடுகளிலிருந்தும் மியான்மருக்குச் சென்றுள்ள மீட்புக்குழுவினர் அங்கு பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் களப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இதுவரை வெளியாகியுள்ள தகவலின்படி, நிலநடுக்கத்தால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,600-ஐ கடந்துவிட்டதாகவும், உயிரிழப்பு மேலும் அதிகரிக்குமென்றும் கள நிலவரங்கள் தெரிவிக்கின்றன.
இதையும் படிக்க: மியான்மரில் ஒரே நாளில் 15 முறை நிலநடுக்கம்! என்ன காரணம்?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.