பாகிஸ்தான் கண்டனம் 
உலகம்

ஆபரேஷன் சிந்தூர்! பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் அவசர நிலை!

இந்தியாவின் திடீர் தாக்குதலையடுத்து, பாகிஸ்தான் பஞ்சாப் மாகாணத்தில் அவசர நிலை பிறப்பித்துள்ளது.

DIN

பஹல்காம் தாக்குதலையடுத்து, ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையாக செவ்வாய்க்கிழமை நள்ளிரவில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் பயங்கரவாதிகளின் 9 முகாம்கள் மீது இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியது.

இருப்பினும், பாகிஸ்தான் ராணுவத் தளவாடங்கள் மீது எந்தத் தாக்குதலுல் நடத்தப்படவில்லை என்று பாதுகாப்புத் துறை தெரிவித்தது.

மேலும், இந்தியா - பாகிஸ்தான் எல்லைகளில் வான் பாதுகாப்பு அமைப்புகளும் தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

இந்தத் தாக்குதலையடுத்து, பாகிஸ்தான் தரப்பில் தெரிவித்ததாவது, இந்திய வான்பரப்பில் இருந்து தாக்குதல் பாகிஸ்தான் மீது தாக்குதல். கோழைத்தனமான இந்தியாவின் நடவடிக்கை தக்க பதிலடியை, சரியான இடத்தில் உரிய நேரத்தில் அளிக்கப்படும். இந்தியாவின் தற்காலிக மகிழ்ச்சி நீடிக்காது; துக்கம் சூழவுள்ளது என்று கூறினர்.

இதனிடையே, இந்தியா மீது அத்துமீறி தாக்குதல் நடத்தி வரும்நிலையில், பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் அவசர நிலையும் பிறப்பித்துள்ளது.

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் தாக்குதல் குறித்து அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், இந்தியா - பாகிஸ்தான் போர்ப் பதற்றம் விரைவில் தணியும் என்றார்.

தொடர்ந்து, ``இரு நாடுகளும் பொறுப்புணர்வுடன் நடந்துகொள்ள வேண்டும். மேலும், ராணுவ நடவடிக்கைகளில் இருந்தும் இரு நாடுகளும் பின்வாங்க வேண்டும்’’ என்று ஐ.நா. பொதுச்செயலர் குட்டரேஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை குறித்து புதன்கிழமை காலை 10 மணியளவில் விவரம் அளிக்கப்படும் என்று பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது.

மேலும், இந்த திடீர் நடவடிக்கை குறித்து அமெரிக்கா, ரஷியா, பிரிட்டன், ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளின் பிரதிநிதிகளிடமும் இந்தியா விளக்கமளிக்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

விருதுநகா் மாவட்டத்தில் 1.89 லட்சம் வாக்காளா்கள் நீக்கம்

பரமத்தி வேலூரில் மின் சிக்கன விழிப்புணா்வுப் பேரணி

விவசாயத் தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

நான்காவது மாடியில் இருந்து குதித்தவா் கவலைக்கிடம்

ஆத்தூா் பேரவையில் 25,087 வாக்காளா்கள் நீக்கம்

SCROLL FOR NEXT