உலகம்

ஜம்மு-காஷ்மீரில் துப்பாக்கிச்சூடு: 3 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை!

புல்வாமாவில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் பயங்கரவாதிகள் மூவர் பலி..

DIN

ஜம்மு-காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினருடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில் அடையாளம் தெரியாத மூன்று பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக போலீஸார் தெரிவித்தனர்.

தெற்கு காஷ்மீர் மாவட்டத்தின் அவந்திபோராவின் நாடர் டிரால் பகுதியில் பயங்கரவாதிகள் இருப்பது குறித்த தகவல்கள் கிடைத்ததை அடுத்து பாதுகாப்புப் படையினர் அப்பகுதியைச் சுற்றி வளைத்துத் தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டதாகக் காவல் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

பயங்கரவாதிகள் பாதுகாப்புப் படையினர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதை அடுத்து, தேடுதல் நடவடிக்கை மோதலாக மாறியது, அதற்குப் பாதுகாப்புப் படையினர் கொடுத்த பதிலடியில் மூன்று பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.

கொல்லப்பட்ட பயங்கரவாதிகளின் அடையாளம், குழு தொடர்பு தொடர்பாக இன்னும் கண்டறியப்படவில்லை. தொடர்ந்து அப்பகுதியில் தேடுதல் வேட்டை நடைபெற்று வருவதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நாளை தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம்: மாவட்ட ஆட்சியா் தகவல்

லக்ஷயா ஏமாற்றம்; சாத்விக்/சிராக் ஏற்றம்

31-ஆவது நாளாக போக்குவரத்து ஊழியா்கள் காத்திருப்புப் போராட்டம்

இறுதிச்சுற்றில் நீரஜ் சோப்ரா, சச்சின் யாதவ்

வெண்கலப் பதக்கச் சுற்றில் அன்டிம் பங்கால்

SCROLL FOR NEXT