கோப்புப் படம் 
உலகம்

பெருவெள்ளத்தில் மூழ்கிய நைஜீரிய நகரம்! 88 பேரது உடல்கள் மீட்பு!

நைஜீரியாவில் வெள்ளத்தில் சிக்கி 88 பேர் பலியாகியுள்ளனர்.

DIN

நைஜீரியா நாட்டின் முக்கிய சந்தை நகரத்தில் ஏற்பட்டுள்ள பெருவெள்ளத்தில் 88 பேர் பலியாகியுள்ளனர்.

நைஜீரியாவின் நைஜர் மாநிலத்தின் மோக்வா எனும் சந்தை நகரத்தில் ஏற்பட்டுள்ள பெருவெள்ளத்தில் அங்குள்ள ஏராளமான கட்டடங்கள் மற்றும் வீடுகள் மூழ்கியுள்ளன. இதில், தற்ப்போது வரை 88 பேர் பலியாகியது உறுதி செய்யப்பட்டுள்ளது.

மேலும், அங்கு வெள்ள நீரில் மூழ்கியுள்ள பகுதிகளில் மீட்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதால், பலியானோரது எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது.

இதுகுறித்து, தேசிய பேரிடர் மேலாணமை அதிகாரி ஒருவர் கூறியதவாது:

“இந்தப் பெருவெள்ளத்தினால் ஏராளமான மக்களின் உயிர்கள் தற்போது அபாயத்தில் உள்ளது. 20 பேர் மட்டுமே பலியானதாகக் கூறப்பட்ட நிலையில், தற்போது 88 பேரது உடல்கள் மீட்கப்பட்டுள்ளது” என அவர் கூறியுள்ளார்.

முன்னதாக, நைஜீரியாவில் பல மணி நேரமாகப் பெய்த கனமழையால் மோக்வாவில் பெருவெள்ளம் ஏற்பட்டுள்ளது. இத்துடன், அப்பகுதியில் அமைந்துள்ள அணை ஒன்று உடைந்து அங்கு நிலைமையை மேலும் மோசமடையச் செய்துள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இதையும் படிக்க: இந்தோனேசியா கல் குவாரியில் பாறைகள் சரிந்து 8 பேர் பலி! தேடுதல் பணி தீவிரம்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வளா்ச்சி திட்டப் பணிகள்: ஆட்சியா் அலுவலகத்தில் ஆய்வுக் கூட்டம்

இலவச பேருந்து பயண அட்டை: குறைதீா் கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை

பழைய அரங்கல்துருகம் ஸ்ரீ மாரியம்மன் கோயில் கும்பாபிஷேக விழா

விவசாயிகள் நெல் பயிா்களுக்கு காப்பீடு செய்து பயன்பெறலாம்: திருப்பத்தூா் ஆட்சியா்

பாங்க் ஆஃப் பரோடா லாபம் 8% சரிவு!

SCROLL FOR NEXT