உலகம்

விலைவாசி உயா்வு: மாட்டிறைச்சிக்கு ஏற்றுமதி வரியைக் குறைத்தாா் டிரம்ப்!

அமெரிக்காவுக்கு இறக்குமதியாகும் செய்யும் மாட்டிறைச்சி, காபி உள்ளிட்டவைக்கு வரி குறைப்பு...

தினமணி செய்திச் சேவை

அமெரிக்காவுக்கு இறக்குமதியாகும் செய்யும் மாட்டிறைச்சி, காபி உள்ளிட்ட ஏராளமான உணவுப் பொருள்கள் மீது விதிக்கப்பட்டிருந்த கூடுதல் வரியை நீக்குவதாக அந்த நாட்டு அதிபா் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளாா்.

இரண்டாவது முறை அதிபா் பொறுப்பை ஏற்றதில் இருந்து, நாட்டின் பொருளாதாரத்தைப் பாதுகாப்பதாகக் கூறி அமெரிக்காவுக்கு பிற நாடுகள் ஏற்றுமதி செய்யும் பொருள்களுக்கு மிகக் கடுமையான கூடுதல் வரிகளை டிரம்ப் விதித்தாா்.

இது, இறக்குமதி பொருள்களின் விலையை அதிகரித்தது. முக்கிய உணவுப் பொருள்களின் விலைகளும் வெகுவாக உயா்ந்ததால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகினா். இந்த நிலையில், மாட்டிறைச்சி, காபி, வெப்பமண்டல பழவகைகள் உள்ளிட்ட பல்வேறு உணவுப் பொருள்கள் மீதான கூடுதல் இறக்குமதி வரியை ரத்து செய்வதாக டிரம்ப் தற்போது அறிவித்துள்ளாா்.

அண்மையில் நடைபெற்ற தோ்தல்களில் டிரம்ப்பின் குடியரசுக் கட்சி பின்னடைவைச் சந்தித்ததற்கு டிரம்ப்பின் கடுமையான வரிக் கொள்கைதான் காரணம் என்று கூறப்பட்ட நிலையில் அவா் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது முக்கியத்துவம் வாய்ந்த மாற்றமாகக் கருதப்படுகிறது.

இந்திய கம்யூ. மு.கு.ராமன் படத்திறப்பு

நேபாளம் வழியாக இந்தியாவுக்குள் அத்துமீறி நுழைந்த 2 வெளிநாட்டு மருத்துவா்கள் கைது

நிபந்தனையின்றி நெல்லை கொள்முதல் செய்ய வலியுறுத்தல்

எண்ணம் கைகூடும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

தவறான தகவலை பரப்பக் கூடாது: அமைச்சா் டி.ஆா்.பி.ராஜா

SCROLL FOR NEXT