முகப்பு
உலகம்

டிட்வா புயல்: இலங்கையில் உயிரிழப்பு 190-ஐ கடந்தது!

இலங்கையில் டிட்வா புயலால் ஏற்பட்ட பாதிப்புகளைப் பற்றி...

Updated On : 30 நவம்பர் 2025, 3:55 pm IST
- AP
பகிர்:

கொழும்பு: இலங்கையில் டிட்வா புயலால் ஏற்பட்ட பாதிப்புகளில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 190-ஐ கடந்தது.

தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் அதையொட்டிய வட தமிழக - புதுவை கடற்பகுதிகளில் பகுதிகளில் நிலவும் ‘டிட்வா’ புயலால் இலங்கையில், 2,66,114 குடும்பங்களைச் சேர்ந்த 9,68,304 பேர் பேரிடரால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில், மழை, வெள்ள பாதிப்புகள் குறித்து இலங்கை பேரிடர் மேலாண்மை மையம் ஞாயிற்றுக்கிழமை(நவ. 30) வெளியிட்டுள்ள தரவுகளின்படி, இலங்கையில் கடந்த வியாழக்கிழமைமுதல் இன்றுவரை மழை, வெள்ள பாதிப்புகளில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 193 ஆக உயர்ந்துள்ளது. 228 பேர் வெள்ளத்தில் மாயமாகியிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடுமையான சேதத்தைச் சந்தித்துள்ள இலங்கையுடன் மீட்புப்பணிகளில் இந்தியாவிலிருந்து அனுப்பப்பட்டுள்ள தேசிய பேரிடர் மீட்புப்படையும் இந்திய விமானப்படையும் கைகோத்துள்ளது. இலங்கையிலுள்ள இந்தியர்கள் உதவி தேவைப்பட்டால் +94 773727832 என்ற எண்ணில் தொடர்புகொள்ள அறிவுறுத்தப்பட்டிருக்கிறார்கள்.

Advertisement

Advertisement

summary

India helps Sri Lanka in rescue efforts as death toll due to Cyclone Ditwah crosses 190

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments