பாகிஸ்தான் வெள்ளம்: பஞ்சாபில் பலி எண்ணிக்கை 78 ஆக அதிகரிப்பு!
பஞ்சாப் மாகாணத்தில் வெள்ளத்தால் பலியானோரது எண்ணிக்கை 78 ஆக அதிகரித்துள்ளது குறித்து...
பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் ஏற்பட்ட வெள்ளத்தில் பலியானோரது எண்ணிக்கை 78 ஆக அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பஞ்சாப் மாகாணத்தின் தெற்கு பகுதிகள் வெள்ளத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த 3 நாள்களில் மட்டும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பஞ்சாப் நகரங்களில் இருந்து சுமார் 16,000-க்கும் அதிகமானோர் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், கடந்த ஆகஸ்ட் 23 ஆம் தேதி முதல் பஞ்சாபில் வெள்ளம் மற்றும் அதன் பாதிப்புகளினால் பலியானவர்களின் எண்ணிக்கை 78 ஆக அதிகரித்துள்ளதாகவும், சுமார் 42 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
இத்துடன், சுமார் 4,500 கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ள நிலையில், 22 லட்சம் மக்கள் மற்றும் 17 லட்சம் கால்நடைகள் பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாக, பாகிஸ்தான் அதிகாரிகள் கூறியுள்ளனர்.
முன்னதாக, பருவமழை தீவிரமடைந்து பெய்த கனமழையால், நீர்நிலைகள் நிரம்பியும், முக்கிய அணைகள் திறக்கப்பட்டதாலும் பாகிஸ்தானின் பல்வேறு மாகாணங்களில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: வர்த்தக ஒப்பந்தம்! இந்தியா - அமெரிக்க அமைச்சர்களின் பேச்சால் குழப்பம்!
The death toll from floods in Pakistan's Punjab province has risen to 78, it has been reported.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.