முகப்பு
உலகம்

இலங்கை சிறைக் கலவரம்: பலி எண்ணிக்கை 27-ஆக உயர்வு!

இலங்கை சிறைச்சாலையில் கைதிகளுக்கிடையே நடைபெற்ற மோதல் பற்றி..

Updated On : 7 ஜூலை 2026, 2:55 pm IST
சிறைக் கலவரம் - file photo
பகிர்:

இலங்கையின் நெகம்போ சிறைக்கலவரத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27-ஆக உயர்ந்ததுள்ளது.

தலைநகா் கொழும்பிலிருந்து 35 கி.மீ. தூரத்தில் உள்ள நீா்கொழும்பு நகரில் அமைந்த இச்சிறையில் சுமாா் 1,800-க்கும் அதிகமான கைதிகள் அடைக்கப்பட்டிருந்தனர். சிறையில் ஞாயிற்றுக்கிழமை தொடங்கி, திங்கள்கிழமை வரை நீடித்தது.

வன்முறையின்போது பாதுகாப்பாக வெளியேற்றப்பட்ட சுமார் 700 கைதிகளில் பல வெளிநாட்டினரும் அடங்குவர். இச்சம்பவம் குறித்து விசாரிக்கவும், இது மீண்டும் நிகழாமல் தடுப்பதற்கான நடவடிக்கைகளைப் பரிந்துரைக்கவும் ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி தலைமையிலான மூவர் கொண்ட குழுவை அரசு அறிவித்துள்ளது.

Advertisement

Advertisement

சிறைத்துறை செய்தித் தொடர்பாளர் ஏ.சி. கஜநாயக்கே கூறுகையில்,

கைதிகளின் இரு குழுக்களுக்கு இடையே தொடங்கிய மோதல், சிறையிலிருந்து தப்பிக்கும் முயற்சியாக மாறியது. காலை உணவு பரிமாறப்பட்டபோது கைதிகள் சிறை அதிகாரிகளைத் தாக்கினர். அதனைத் தொடர்ந்து நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஏழு சிறை அதிகாரிகளும் 26 கைதிகளும் கொல்லப்பட்டனர். மேலும் பலர் காயமடைந்தனர். செவ்வாய்க்கிழமை காலை பலி எண்ணிக்கை ஒன்று அதிகரித்து 27-ஐ எட்டியுள்ளது.

100-க்கும் மேற்பட்ட கைதிகள், சிறை அதிகாரிகள் நெகம்போ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்; அவர்களில் சிலர் கொழும்பில் உள்ள தேசிய மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர். அவர்களில் குறைந்தது 10 பேருக்கு அவசர அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.

வன்முறைக்கு வழிவகுத்திருக்கக்கூடிய குறைபாடுகள் இருந்தால் அவை முழுமையான விசாரணையின் மூலம் கண்டறியப்படும் என சிறைச்சாலைகளுக்கான அமைச்சர் ஹர்ஷன நானயக்கார நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

The death toll in the Negombo prison riots rose to 27 on Tuesday as authorities said the situation had been brought under control.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments