நீட் மறுத்தேர்வில் பங்கேற்காத 2 லட்சம் மாணவர்கள்! காரணம் என்ன?
நீட் மறுத்தேர்வை சுமார் 2 லட்சம் மாணவர்கள் தவிர்த்துள்ளது குறித்து...
நீட் மறுத்தேர்வில் சுமார் 2 லட்சம் மாணவர்கள் பங்கேற்காமல் தவிர்த்துள்ளதாக, தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.
2026 ஆம் ஆண்டின் மருத்தவப் பட்டப்படிப்பிற்காக, கடந்த மே 3 அன்று நடத்தப்பட்ட நீட் தேர்வின் வினாத்தாள் கசிந்ததால் அந்தத் தேர்வு மத்திய கல்வித்துறையால் ரத்து செய்யப்பட்டது. இதனால், லட்சக்கணக்கான மாணவர்கள் பாதிக்கப்பட்டனர்.
இதனைத் தொடர்ந்து, இந்தியா முழுவதும் கடந்த ஜூன் 21 அன்று நீட் மறுத்தேர்வு நடத்தப்பட்டது. மே 3 மற்றும் ஜூன் 21 இடையிலான காலத்தில் மட்டும் நீட் தேர்வுக்குப் பயிற்சி பெற்று வந்த சுமார் 21 மாணவர்கள் மன அழுத்தத்தால் தற்கொலை செய்துக்கொண்டனர்.
Advertisement
Advertisement
கடந்த மே 3 அன்று நடத்தப்பட்ட நீட் தேர்வில் நாடு முழுவதும் 22,05,035 மாணவர்கள் எழுதிய நிலையில், ஜூன் 21 அன்று நடத்தப்பட்ட மறுத்தேர்வில் வெறும் 20 லட்சம் மாணவர்கள் மட்டுமே பங்கேற்றதாக, தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ள தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், மே 3 தேர்வு எழுதிய மாணவர்களின் மொத்த எண்ணிக்கையில், 9 சதவிகிதம் குறைந்து சுமார் 2 லட்சம் மாணவர்கள் மறுத்தேர்வில் பங்கேற்கவில்லை என்பது தெரியவந்துள்ளது.
இதுபற்றி, தேசிய தேர்வு முகமை தரப்பில் கூறுகையில், நீட் தேர்வில் பங்கேற்ற மாணவர்களில் பலர் ஐஐடி மற்றும் பொறியியல் கல்லூரிகளில் இடம்பெறுவதற்கான ஜேஇஇ தேர்வையும் எழுதியதாகவும்; அந்தத் தேர்வில் நல்ல மதிப்பெண்களைப் பெற்றதால் நீட் மறுத்தேர்வில் பங்கேற்காமல் இருந்திருக்கக் கூடும் எனவும் கூறப்பட்டுள்ளது.
ஆனால், நீட் வினாத்தாள் கசிவு ஏற்படுத்திய மன உளைச்சல் மற்றும் அதனால் தேர்வு நடைமுறையின் மீதான நம்பிக்கை குறைந்ததால் பெரும்பாலான மாணவர்கள் மறுத்தேர்வை புறக்கணித்திருக்கக் கூடும் என கல்வித்துறை நிபுணர்கள் கூறுவது குறிப்பிடத்தக்கது.
NTA has announced that approximately 2 lakh students have skipped the NEET re-examination.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.