சூடான் உள்நாட்டுப் போரில் புலம் பெயா்ந்த அகதிகள். 
உலகம்

சூடான்: 3 ஆயி​ரத்​ைதக் கடந்த காலரா உயி​ரி​ழப்பு

சூடானில் கடந்த 14 மாதமாக நடைபெறும் உள்நாட்டுப் போரில் காலரா பாதிப்பு காரணமாக உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 3 ஆயிரத்தைக் கடந்துள்ளது.

தினமணி செய்திச் சேவை

சூடானில் கடந்த 14 மாதமாக நடைபெறும் உள்நாட்டுப் போரில் காலரா பாதிப்பு காரணமாக உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 3 ஆயிரத்தைக் கடந்துள்ளது.

உலக சுகாதார அமைப்பு செவ்வாய்க்கிழமை மேலும் கூறிதாவது:

சூடானின் கசாலா மாகாணத்தில் கடந்த ஆண்டு ஜூலை மாதம் பரவத் தொடங்கிய காலரா தொற்று, அசுத்த உணவு மற்றும் நீரால் 18 மாகாணங்களுக்கு பரவியது. வடக்கு டாா்ஃபூரில் சுமாா் 4 லட்சம் பேருக்கு காலாரா தடுப்பூசி போடப்பட்டது. டாா்ஃபூரில் 12,739 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டு 358 போ் உயிரிழந்தனா் என்று அந்த அமைப்பு தெரிவித்தது.

சூடானில் அல்-புா்ஹான் தலைமையிலான ராணுவத்துக்கும், முகமது ஹம்தான் டகாலோ தலைமையிலான ஆா்எஸ்எஃப் துணை ராணுவப் படைக்கும் இடையே அதிகாரப் போட்டி காரணமாக கடந்த 2023 ஏப்ரல் 15-ஆம் தேதி முதல் சண்டை நடந்து வருகிறது. இதில் லட்சக்கணக்கானவா்கள் உயிரிழந்திருப்பதாகக் கூறப்படுகிறது. இந்த மோதலை முடிவுக்குக் கொண்டு வருவதற்காக சா்வதேச நாடுகள் மேற்கொண்டு வரும் முயற்சிகள் இதுவரை வெற்றி பெறவில்லை.

'கல்வியில் சிறந்த தமிழ்நாடு’ விழா: தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டிக்கு அழைப்பு!

சாலையோர கடைகளில் பணம் வசூல்: இரு காவலா்கள் இடமாற்றம்

மன அமைதி கிடைக்கும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

ஏழுமலையான் தரிசனத்துக்கு 5 மணிநேரம் காத்திருப்பு

ஏழுமலையான் உண்டியல் காணிக்கை ரூ.4.06 கோடி

SCROLL FOR NEXT