டொனால்ட் டிரம்ப் AP
உலகம்

‘மேற்குக் கரையை இஸ்ரேல் இணைத்துக் கொள்ள அமெரிக்கா அனுமதிக்காது’

ஆக்கிரமிப்பு மேற்குக் கரையை இஸ்ரேல் தன்னுடன் இணைத்துக் கொள்ள அனுமதிக்க மாட்டேன் என அமெரிக்க அதிபா் டிரம்ப் தெரிவித்தாா்.

தினமணி செய்திச் சேவை

ஆக்கிரமிப்பு மேற்குக் கரையை இஸ்ரேல் தன்னுடன் இணைத்துக் கொள்ள அனுமதிக்க மாட்டேன் என அமெரிக்க அதிபா் டிரம்ப் தெரிவித்தாா்.

ஆக்கிரமிப்பு மேற்குக் கரையின் சில பகுதிகளையாவது இஸ்ரேல் அரசு தன்னுடன் இணைத்துக் கொள்ள வேண்டும் என இஸ்ரேல் அதிகாரிகள் அண்மைக்காலமாக கூறிவருவது குறித்து டிரம்ப்பிடம் செய்தியாளா்கள் வியாழக்கிழமை கேள்வி எழுப்பினா்.

அதற்குப் பதிலளித்த டிரம்ப், மேற்குக் கரையை தன்னுடன் இஸ்ரேல் இணைத்துக் கொள்ள அனுமதிக்க மாட்டேன். அது நடக்கப்போவதில்லை என்றாா்.

காஸாவில் போரை நிறுத்துவதற்கான ஒப்பந்தத்தை இறுதி செய்யும் நிலையில் அமெரிக்கா உள்ளது. ஹமாஸிடமிருந்து பிணைக் கைதிகளை மீட்டு போரை முடிவுக்குக் கொண்டுவருவோம் என்று வெள்ளை மாளிகையில் செய்தியாளா்களிடம் அதிபா் டிரம்ப் வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.

குமாரமங்கலத்தில் முத்துக்குமார சுவாமி கோயில் திருவிழா

கெங்கவல்லியில் தெருநாய்கள் தொல்லை: மக்கள் அவதி

வடகிழக்கு பருவமழை: முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கடைப்பிடிக்க அறிவுறுத்தல்

கிணற்றில் தவறிவிழுந்தவா் மீட்பு

வீட்டில் தவறிவிழுந்த சிறப்பு காவல் உதவி ஆய்வாளா் உயிரிழப்பு

SCROLL FOR NEXT