முகப்பு
உலகம்

ஹோர்முஸ் முற்றுகை! அமெரிக்காவுக்கு சீனா எச்சரிக்கை!

அமெரிக்காவுக்கு சீனா எச்சரிக்கை விடுத்திருப்பது பற்றி...

Updated On : 14 ஏப்ரல் 2026, 10:48 am IST
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், சீன அதிபர் ஜின்பிங்
பகிர்:

ஈரான் - சீனா இடையேயான இருதரப்பு உறவுகளில் தலையிட வேண்டாம் என்று அமெரிக்காவுக்கு சீனா எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஈரான், அமெரிக்கா இடையே பாகிஸ்தானில் சனிக்கிழமை நடைபெற்ற போர் நிறுத்தப் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்ததை அடுத்து, திங்கள்கிழமை காலை ஹோர்முஸ் நீரிணையை அமெரிக்க கடற்படை முற்றுகையிட்டுள்ளது.

இந்த நிலையில், இந்திய நேரப்படி திங்கள்கிழமை இரவு (அமெரிக்கா முற்றுகையிட்ட நேரத்தில்) சீன பாதுகாப்புத் துறை அமைச்சர் அட்மிரல் டாங் ஜு அமெரிக்காவுக்கு எச்சரிக்கை ஒன்றை வெளியிட்டார்.

Advertisement

Advertisement

“ஈரானுடன் எங்களுக்கு வர்த்தக மற்றும் எரிசக்தி ஒப்பந்தங்கள் உள்ளன. எங்கள் விவகாரங்களில் யாரும் தலையிடக்கூடாது என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்” என்று தெரிவித்தார்.

சீனாவுக்கு தேவைப்படும் கச்சா எண்ணெய்யில் 40 சதவிகிதமும், திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு (எல்என்ஜி) 30 சதவிகிதமும் ஹோர்முஸ் நீரிணை வழியாகவே கொண்டு செல்லப்படுகிறது.

ஹோர்முஸ் நீரிணையை அமெரிக்க கடற்படை கைப்பற்றியிருக்கும் சூழலில், சீனாவுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதனிடையே, செய்தியாளர்களை சந்தித்த டிரம்ப், “ஈரானியக் கடற்பரப்பு முழுவதையும் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். மேலும், அமெரிக்கா முற்றுகையிடப்பட்டு அதன் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும் பகுதிக்குள் ஈரானியக் கப்பல்கள் நுழைந்தால் தாக்கி அழிக்கப்படும்” என எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் எச்சரிக்கையால் மீண்டும் மத்திய கிழக்கு நாடுகளில் பதற்றம் உருவாகியுள்ளது.

summary

Strait of Hormuz! China Warns the US!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.