கிரீன்லாந்து விற்பனைக்கு அல்ல! - டிரம்ப் முன்னிலையில் டென்மார்க் பிரதமர் பேச்சு!
கிரீன்லாந்து விற்பனைக்கு அல்ல என டென்மார்க் பிரதமர் மெட்டே ஃப்ரெடெரிக்சன் பேச்சு...
கிரீன்லாந்து பகுதி விற்பனைக்கு அல்ல என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பங்கேற்ற நேட்டோ அமைப்பின் மாநாட்டில் டென்மார்க் பிரதமர் மெட்டே ஃப்ரெடெரிக்சன் கூறியுள்ளார்.
அமெரிக்க அதிபர் டிரம்ப் கடந்த 2025 ஆம் ஆண்டு 2 ஆவது முறையாக ஆட்சி அமைத்தது முதல் டென்மார்க் நாட்டின் தன்னாட்சி பகுதியான கிரீன்லாந்தை அமெரிக்கா கைப்பற்ற வேண்டும் எனத் தொடர்ந்து கூறி வருகிறார்.
இதனைத் தொடர்ந்து, கிரீன்லாந்தை ஆக்கிரமிப்பது குறித்து அவரின் கருத்துகள், பதிவுகள் மற்றும் செய்யறிவு புகைப்படங்களுக்கு சர்வதேச அளவில் கண்டனங்கள் எழுந்தன.
Advertisement
Advertisement
துருக்கி நாட்டின் தலைநகர் அங்காராவில் நேட்டோ அமைப்பின் 2026 ஆம் ஆண்டுக்கான 2 நாள் மாநாடு நேற்று (ஜூலை 7) தொடங்கியது. அமெரிக்க அதிபர் டிரம்ப் உள்ளிட்ட நேட்டோ நாடுகளின் தலைவர்கள் இந்த மாநாட்டில் பங்கேற்றுள்ளனர்.
இந்த நிலையில், மாநாட்டில் பேசிய அதிபர் டிரம்ப் மற்றொரு நேட்டோ நாடான டென்மார்க்கின் கிரீன்லாந்தை அமெரிக்கா கைப்பற்ற வேண்டுமென மீண்டும் வலியுறுத்தி பேசியது சர்ச்சையைக் கிளப்பியது.
இதையடுத்து, இந்த மாநாட்டில் இன்று பேசிய டென்மார்க் பிரதமர் ஃப்ரெடெரிக்சன், கிரீன்லாந்து விற்பனைக்கு அல்ல எனக் கூறியுள்ளது பெருமளவில் கவனம் பெற்றுள்ளது.
இதுபற்றி, அவர் பேசியதாவது:
“நட்பு நாடுகள் உள்பட அனைவரும் கிரீன்லாந்து மக்களின் உரிமையை மதிப்பார்கள் என நாங்கள் நம்புகிறோம். நாங்கள் இறையாண்மை கொண்ட நாடுகள். எனவே, எங்களின் பிராந்திய ஒருமைப்பாட்டையும் இறையாண்மையையும் அனைவரும் மதிக்க வேண்டுமென நாங்கள் விரும்புகிறோம்.
கிரீன்லாந்து நிச்சயமாக விற்பனைக்கு அல்ல” எனக் கூறியுள்ளார்.
Danish PM Mette Frederiksen stated at a NATO summit attended by Trump that Greenland is not for sale.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.