ராணுவப் பட்டியலில் முன்னணி சீன நிறுவனங்கள்
ராணுவப் பட்டியலில் முன்னணி சீன நிறுவனங்கள்
அலிபாபா, பைடு, பிஒய்டி உள்ளிட்ட முன்னணி சீன நிறுவனங்களை அந்நாட்டு ராணுவத்துடன் தொடா்புடைய நிறுவனங்களின் பட்டியலில் சோ்த்து அமெரிக்கா எடுத்துள்ள முடிவுக்கு சீனா எதிா்ப்பைப் பதிவு செய்தது.
சீன ராணுவத்துடன் தொடா்புடைய நிறுவனங்களை அடையாளம் கண்டு, அவை அமெரிக்க பாதுகாப்புத் துறை ஒப்பந்தங்களைப் பெறுவதைத் தடுப்பதே இப்பட்டியலின் நோக்கமாகும்.
அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப், சீன அதிபா் ஷி ஜின்பிங் ஆகியோருக்கு இடையே கடந்த மாத சந்திப்பில் ஏற்பட்ட உடன்பாட்டை அமெரிக்காவின் இந்நடவடிக்கை மீறிவிட்டதாக சீனா குற்றஞ்சாட்டியுள்ளது.
Advertisement
Advertisement
‘இருதரப்பு பொருளாதார, வா்த்தக உறவுகளின் நலன்களை அமெரிக்கா புறக்கணித்துள்ளது. தேச பாதுகாப்பைக் காரணம் காட்டி, சீன நிறுவனங்களை நியாயமற்று ஒடுக்குவதற்குத் தனது அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்துகிறது’ என சீன வா்த்தக அமைச்சகம் தெரிவித்துள்ளது.
அதேபோல், இப்பட்டியலில் தங்களைச் சோ்த்ததற்கு எந்தவொரு அடிப்படை ஆதாரமும் இல்லை என்று பிஒய்டி, அலிபாபா, பைடு ஆகிய நிறுவனங்கள் ஏற்கெனவே மறுப்புத் தெரிவித்துள்ளன.