முகப்பு
உலகம்

இந்திய கப்பல்கள் மீதான தாக்குதலை திசைத்திருப்ப டிரம்ப் முயற்சி! - ஈரான் குற்றச்சாட்டு!

இந்திய கப்பல்கள் மீதான அமெரிக்க தாக்குதலை அதிபர் டிரம்ப் திசைத்திருப்ப முயற்சிப்பதாக ஈரான் குற்றஞ்சாட்டியுள்ளது...

Updated On : 13 ஜூன் 2026, 11:42 am IST
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் - AP
பகிர்:

இந்திய கப்பல்கள் மீதான அமெரிக்க படைகளின் தாக்குதலை திசைத்திருப்ப அதிபர் டொனால்ட் டிரம்ப் முயற்சிப்பதாக, ஈரான் அரசு குற்றஞ்சாட்டியுள்ளது.

ஹோர்முஸ் நீரிணை பகுதியில், கடந்த வியாழக்கிழமை (ஜூன் 11) அன்று இந்திய கப்பல்கள் மீது அமெரிக்க படைகள் ட்ரோன் மூலம் நடத்திய தாக்குதலில் 3 இந்திய மாலுமிகள் கொல்லப்பட்டனர். இந்தத் தாக்குதலுக்கு, சர்வதேச நாடுகளும் கண்டனம் தெரிவித்துள்ளன.

இந்திய கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தியதை அமெரிக்க கடற்படை ஒப்புக்கொண்ட நிலையில், இந்தத் தாக்குதலை ஈரானிய படைகள் நடத்தியதாக, வெள்ளிக்கிழமை (ஜூன் 12) மாலை அதிபர் டிரம்ப் பதிவிட்டிருந்தது சந்தேகத்தை எழுப்பியது.

Advertisement

Advertisement

இந்த நிலையில், இந்திய கப்பல்கள் மீதான தாக்குதலை அதிபர் டிரம்ப் திசைத்திருப்ப முயற்சிப்பதாகவும், அவரது குற்றச்சாட்டு முற்றிலும் ஆதாரமற்றது எனவும் இன்று (ஜூன் 13) இந்தியாவுக்கான ஈரானிய தூதரகம் தெரிவித்துள்ளது.

இதுபற்றி, ஈரானிய தூதரகம் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில்,

“ஹோர்முஸ் நீரிணையில் இந்திய கப்பல்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியதாகக் கூறும் அமெரிக்க அதிபரின் குற்றச்சாட்டு முற்றிலும் ஆதாரமற்றது.

இது, 3 இந்திய கப்பல்கள் மீது அமெரிக்கா நடத்திய தாக்குதலில் 3 அப்பாவி இந்திய மாலுமிகள் கொல்லப்பட்டனர் எனும் உண்மையைத் திசைத்திருப்பும் முயற்சி. அது மிகவும் பரிதாபகரமானது” எனக் கூறப்பட்டுள்ளது.

summary

The Iranian government has accused Trump of attempting to divert attention from the attack by US forces on Indian ships.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.