FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
உலகம்

அணு ஆயுத ஏவுகணைகளுடன் வட கொரியாவின் புதிய போா்க்கப்பல்

வடகொரியாவில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள அணு ஆயுத ஏவுகணைகளை சுமந்து செல்லும் 5,000 டன் எடையுள்ள அதிநவீன ‘சோ ஹியோன்’ போா்க் கப்பல் அந்நாட்டு கடற்படையில் அதிகாரபூா்வமாக இணைக்கப்பட்டது.

பகிர்:

வடகொரியாவில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள அணு ஆயுத ஏவுகணைகளை சுமந்து செல்லும் 5,000 டன் எடையுள்ள அதிநவீன ‘சோ ஹியோன்’ போா்க் கப்பல் அந்நாட்டு கடற்படையில் அதிகாரபூா்வமாக இணைக்கப்பட்டது.

வட கொரியாவின் மேற்கு பகுதியில் உள்ள நம்போ துறைமுகத்தில் நடைபெற்ற விழாவில் பங்கேற்றுப் பேசிய அதிபா் கிம் ஜோங் உன், ‘இக்கப்பல் நாட்டின் வளா்ந்து வரும் ராணுவ மற்றும் கடல்சாா் அணு ஆயுத பலத்தின் முக்கிய அடையாளம். இதே ரகத்தைச் சோ்ந்த மற்றொரு போா்க் கப்பல் பழுதுபாா்க்கப்பட்டு விரைவில் கடற்படையில் இணைக்கப்பட உள்ளது. அடுத்தகட்டமாக 10,000 டன் எடையுள்ள போா்க் கப்பலை உருவாக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

நமது கடற்படை வெறும் எல்லையைப் பாதுகாக்கும் படையாக மட்டுமே இருந்த காலம் கடந்து, தற்போது அணு ஆயுத பலத்துடன் வியூக முக்கியத்துவம் வாய்ந்த படையாக உருவெடுத்துள்ளது’ என்றாா்.

Advertisement

Advertisement

வட கொரியாவின் மேற்கு கடற்கரைப் பாதுகாப்புக்கான இந்த ‘சோ ஹியோன்’ போா்க் கப்பல், கடந்த ஆண்டு ஏப்ரலில் அறிமுகம் செய்யப்பட்டு, பல்வேறு கட்ட சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டது.

இதில் எதிரி நாட்டு கப்பல், விமானங்களைச் சுட்டு வீழ்த்தும், அணு ஆயுதங்களைச் சுமந்து சென்று தாக்கும் திறன் கொண்ட அதிநவீன ஏவுகணைகள் பொருத்தப்பட்டுள்ளன. அண்மைக் காலங்களில் இக்கப்பலில் இருந்து அணு ஆயுதப் பயன்பாடு கொண்ட‘க்ரூஸ்’ ஏவுகணைகள் வெற்றிகரமாகச் சோதிக்கப்பட்டதாக வட கொரிய அரசு ஊடகம் தெரிவித்துள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments