பிரான்ஸில் கடும் வெப்ப அலை: ஆயிரக்கணக்கானோர் உயிரிழப்பு!
பிரான்ஸில் கடும் வெப்ப அலை காரணமாக தினமும் ஆயிரக்கணக்கானோர் உயிரிழப்பதாகத் தரவுகள் வெளியாகியுள்ளன.
பிரான்ஸில் கடந்த வாரம் முதல் நிலவும் வரலாறு காணாத வெப்ப அலை காரணமாக தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் பலியாவதாக அந்நாட்டின் பொது சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
அதேபோல, ஜெர்மனியில் புதிய அதிகபட்ச வெப்பநிலை பதிவானதைத் தொடர்ந்து அங்கு காட்டுத்தீ ஏற்பட்டது. பெர்லின் பகுதியில் மக்கள் கூட்டத்தைக் குளிர்விக்க காவல்துறையினர் தண்ணீரை பீய்ச்சியடித்து வருகின்றனர்.
ஐரோப்பிய கண்டத்தில் கிழக்குப் பகுதியை நோக்கி புதிய வெப்ப அலை நகர்வதைத் தொடர்ந்து, அங்குள்ள பல நாடுகளில் வெப்ப அளவு பழைய சாதனைகளை முறியடித்து உயர்ந்துள்ளன.
Advertisement
Advertisement
ஜெர்மனியின் குப்ஷுட்ஸ் பகுதியில் இரவு நேர வெப்பநிலை 29.4 டிகிரி செல்சியஸாக பதிவாகியுள்ளது. இப்பகுதியின் அதிகபட்ச வெப்பநிலை பதிவான வரலாற்றில் இதுவே அதிகமானது.
ஜெர்மன் வானிலை ஆய்வு மைய தரவுகளின்படி, மோக்கர்ன்-ட்ரூவிட்ஸ் பகுதியில் பகல் நேர வெப்பநிலை 41.5 டிகிரி செல்சியஸ் என்ற புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது.
இந்த அதிகபட்ச வெப்பநிலை, காலநிலை மாற்றத்தால் மட்டுமே ஏற்பட்டிருப்பதாக ஐரோப்பிய ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
பிரான்ஸில் அதிகரிக்கும் உயிரிழப்புகள்
வரலாறு காணாத வெப்ப அலை காரணமாக பிரான்ஸில் உயிரிழப்புகள் அதிகரித்துள்ளது. குறிப்பாக பாரிஸ் பகுதியில் கணிசமாக உயர்ந்துள்ளன.
பிரான்ஸில் மிக அதிக வெப்பம் பதிவான கடந்த புதனன்று 1,200-க்கும் மேற்படோர் பலியாகினர். அதைத் தொடர்ந்து வந்த இரு நாள்களிலும் தலா 1,400-க்கும் மேற்பட்டோர் பலியானதாகத் தரவுகள் தெரிவிக்கின்றன.
வெப்ப அலைக்கு முந்தைய ஏப்ரல், மே மாதங்களில், பிரான்ஸில் தினசரி உயிரிழப்பு விகிதம் சுமார் 900 முதல் 1,000 வரை இருந்ததாகக் கூறப்படுகிறது.
தீவிர வெப்ப அலை வீசும் பகுதிகளுக்கு 'சிவப்பு எச்சரிக்கை' விடுக்கப்பட்ட நிலையில் அங்கு உயிரிழப்புகள் அதிகரித்துள்ளன. வெப்ப அலை தீவிரமானபோது, நாட்டிலுள்ள பெரும்பாலான பகுதிகளுக்கு அந்த எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டிருந்தன.
பலியானோரில் 85% பேர் 65 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Data has revealed that thousands of people are dying daily in France due to a severe heatwave.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.